என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் மாணவர்கள் மோதல்:2-வது நாளாக கல்வி அதிகாரிகள் விசாரணை
    X

    பள்ளியில் மாணவர்கள் மோதல்:2-வது நாளாக கல்வி அதிகாரிகள் விசாரணை

    • 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவரை பார்த்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
    • ஆவேசம் அடைந்த அந்த மாணவர் 6-ம் வகுப்பு மாணவரின் சட்டை காலரை பிடித்து தூக்கி இழுத்துள்ளார்.

    சேலம்

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த 25-ந்தேதி மதிய உணவு இடை வெளி யின்போது 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவரை பார்த்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர் 6-ம் வகுப்பு மாணவரின் சட்டை காலரை பிடித்து தூக்கி, ஆணில் மாட்டி தொங்க விடுவேன் என கூறி இழுத்துள்ளார். இதில் சட்டை இறுகி குரல் வளையை நெரித்துள்ளது. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் வந்ததால் அந்த மாணவரை விட்டு விட்டார். இதனை தொடர்ந்து 6-ம் வகுப்பு மாணவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து பள்ளியில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், தாசில்தார் செம்மலை, மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    2-வது நாளாக இன்று பள்ளிக்கு சென்று மாவட்ட முதன்ைம கல்வி அதிகாரி கபீர், மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×