என் மலர்
ராணிப்பேட்டை
- 5 பாக்கெட்டுகள் சிக்கியது
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி கிராமத்தில் உள்ள கடைகளில் அவளுர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகி றதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அப் துல்ரகுமான் என்பவரின் மகன் ஆசிக் (வயது 27) என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது 5 பாக்கெட் தடைசெய்யபட்ட ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- கண்காணிப்பு தீவிரம்
- தாசில்தார் உத்தரவின் பேரில் நடவடிக்கை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக வரு வாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்ப டையில் தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தணிகாசலம், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாடி பாலாற்று பகுதியில் ராட்சத பள்ளங்கள் எடுத்து மணல் கடத்தலை தடுக்க நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் இதையும் மீறி யாராவது பாலாற்றில் மணல் கடத் துகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்
- மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி '' என்ற ராணிப்பேட்டை மாவட்ட ஈராண்டு சாதனை மலர் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாதனை மலர் கையேட்டினை வெளியிட்டார்.
795 பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பயன்கள் உள்பட ரூ.4 கோடியே 50 லட்சத்து 73 ஆயிரத்து 527 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்த 2 ஆண்டு சாதனை 200 ஆண்டு சாதனை போன்றுள்ளது.
தற்போதைய மக்களாட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. முன்பெல்லாம் அரசைத் தேடி மக்கள் உதவிகளை பெறுவதற்காக செல்வார்கள்.
ஆனால் தற்போதைய ஆட்சியில் அரசானது மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறது.
அனைத்து அரசு அலுவலர்களும் இரவு பகல் பாராமல் மக்கள் நலனுக்காக செயல்படும் வகையில் முதல் அமைச்சர் அரசுத் துறை அலுவலர்களை வழிநடத்திச் செல்கிறார்.
மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, துணைத் தலைவர் நாகராஜு , வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா உள்பட ஒன்றிய குழு, நகர மன்ற, பேரூராட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் தொகுத்து வழங்கினார்.
- நாளை நடைபெறுகிறது
- திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவிக்கலாம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு மே மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை 13 ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள். உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், அலைபேசி எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்ப த்தலைவரின் புகைப்படம் மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும்.
இது தவிர பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.
மேலும் ரேஷன் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு கொடுத்து பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்க ளுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவ லர் சையுப்தீன் தலைமை தாங்கினார்.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்பு சாமி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தால் 1545 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பயன டைவர். இதற்காக நியமிக்கப்பட்ட சமையலருக்கு ரவா பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா உள்ளிட்ட 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை
- போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது என கூறினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவ சாயம் செய்ய போதுமான அளவு நீர் கிடைத்தது. இதனால் சொர்ணவாரி பருவ பயிர் அறுவடை பணிகள் கடந்த மாதம் முடிவுற்றது.
தொடர்ந்து தற்போது சித்திரை பட்ட பயிர் செய்ய நாற்று விடும் பணி முடிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு பணிகளும் முடிவுற்றது. இந்தநிலையில் நேற்று சிறுவளையம், கர்ணாவூர், உளியநல்லூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து விவசாயி கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளுக் கும் மேலாக விவசாய தொழில் செய்துவருகிறேன். ஆனால் தற்போது விவசாயம் செய்ய மிகவும் கடினமாக உள்ளது. காரணம் நடவு மற்றும் களை எடுக்கும் பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை.
இதனால் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து நடவு மற்றும் களை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார். வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில் எங்களுக்கு போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது. ஒரு மாதம் இங்கு தங்கி களை எடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊருக்கு சென்றுவிடுவோம் என்று கூறினர்.
- ரூ.3 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
- அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி பங்கேற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வசூர், பள்ளேரி மற்றும் கொண்டகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வசூர் கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 247 பயனாளிகள் மற்றும் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக இது போன்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகிறது.
என்னுடைய தொகுதியை பொறுத்த வரையில் என்னால் இயன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
காட்பாடி தொகுதியில் பொன்னைஆற்றில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று ரூ.18 கோடி மதிப்பில் செக் டேம் கட்டி வருகின்றோம்.
இதனால் மழைக்கா லங்களில் வரும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கும். அதனால் குடிநீர் பயன்பாட்டிற்கு தட்டுப்பாடு வராது. மேலும் மேல்பாடிக்கு செல்லும் பாலமும் கட்டப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரி
கடந்த தேர்தலின் போது எனக்கு வாக்களித்தால் ஒரு மருத்துவமனையினை கொண்டு வருவேன் என்று சொல்லியிருந்தேன். அதனை எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வகையில் சேர்க்காடு கூட்டுரோடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இங்குள்ள பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் வேலூர், வாலாஜா, ஆற்காட்டிற்கோ செல்ல வேண்டும். அந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக சேர்க்காடு கூட்டுரோட்டில் ஒரு கலைக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மேற்குறிப்பிட்ட அனைத்துப் திட்டப் பணிகளும் திறக்கப்படும்.
அதேபோன்று காவிரி கூட்டு குடிநிர் திட்டத்தினையும் இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதேபோன்று காட்பாடி தொகுதியில் சிப்காட் ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளோம்.
அதில் காட்பாடி தொகுதி சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். விரைவில் முதல்-அமைச்சரால் சிப்காட் தொடங்கப்படும். இதுபோன்று மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.
குறிப்பாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடிக் கல்வி. காலை உணவு, புதுமைப்பெண் இது போன்ற மகத்தான திட்டங்களை செயல்படுத்தியுள்ள காரணத்தினால் பெரும்பாலான பொதுமக்கள், மகளிர்கள், மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கிட ஏதுவாக முதல்வரின் முகவரி என்ற திட்டத்தினை துவக்கி அதில் பெறப்படும் மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்க ட்ரமணன், துணை தலைவர் ராதா கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம். காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் வேல்முருகன், வாலாஜா தாசில்தார் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்தி, புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சு வார்த்தை
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் பேரூராட்சியில் பாணாவரம் - காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்ற வருகிறது. இதற்காக சாலையின் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டது.
கழிவுநீர் தேக்கம்
ஆனால் கழிவுநீர் கால்வாய் கட்டும்பணிகளை விரைந்து முடிக்காமல் கால தாமதம் ஏற்படுவதால் பள் ளங்களில் கழிவுநீர் தேங்கு கிறது.
இதனால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாணாவ ரம் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பாராட்டி பதக்கங்களை வழங்கினார்
- 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றனர்
அரக்கோணம்:
செங்கல்பட்டில் கடந்த 5-ந் தேதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. குத்துச்சண்டை போட்டிக்கு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் அரக்கோணம் அம்பேத்கர் பாக்சிங் கிளப் மாணவ மாணவிகள் 15 பேர் குத்துச்சண்டை பயிற்சியாளர் பிரேம்குமார் தலைமையில் கலந்து கொண்டனர். அப்போது போட்டியில் மாணவ மாணவிகள் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
வெற்றி பெற்று ஊர் திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு அரக்கோணம் 6வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்து அவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.
- 15 நாளில் 7 மான்கள் இறந்த பரிதாபம்
- வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்
அரக்கோணம்,
அரக்கோணம் - திருப் பதி ரெயில் பாதை யில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று ரெயிலில் அடிபட்ட நிலையில் தண்டவா ளம் அருகே இறந்து கிடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த மான் உடலை மீட்டு இது குறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை அரக்கோணம் கால்நடை மருத்துவரின் பிரேத பரி சோதனைக்கு பின்னர் அப்பகுதியிலேயே எரியூட்டினர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த போது கடந்த 15 நாட்களில் இதுவரை ரெயிலில் அடிபட்டு சுமார் 7 மான்கள் வரை இறந்திருக்கும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண் டும். என்று தெரிவிக்கின்றனர்.
- டிப்பர் லாரி பறிமுதல்
- போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலி அருகே உள்ள சிறுணமல்லி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத் தில் இருந்து மண் கடத்துவ தாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
நெமிலி தாசில்தார் பாலசந்தர் உத்தர வின் பேரில் தலைமையிடத்து துணை தாசில்தார் பன்னீர் செல்வம், வருவாய் ஆய்வா ளர் கனிமொழி ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் வருவதை கண்ட வுடன் மண் கடத்தலில் ஈடு பட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அதிகாரி கள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, நெமிலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- 24 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது
- 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு,
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் தற்காலிகமாக தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அப்போது திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கூறும் போது அரசு விடுமுறை நாட்களில் எங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை. 30 நாட்கள் பணிபுரிந்தாலும் 24 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.
உழைப்பவர்களின் நிலையை கண்டும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செயல் அலுவலர் முத்து, கவுன்சிலர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






