

அரக்கோணம்:
செங்கல்பட்டில் கடந்த 5-ந் தேதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. குத்துச்சண்டை போட்டிக்கு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் அரக்கோணம் அம்பேத்கர் பாக்சிங் கிளப் மாணவ மாணவிகள் 15 பேர் குத்துச்சண்டை பயிற்சியாளர் பிரேம்குமார் தலைமையில் கலந்து கொண்டனர். அப்போது போட்டியில் மாணவ மாணவிகள் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
வெற்றி பெற்று ஊர் திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு அரக்கோணம் 6வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்து அவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.