என் மலர்
நீங்கள் தேடியது "மான் பலி"
- 15 நாளில் 7 மான்கள் இறந்த பரிதாபம்
- வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்
அரக்கோணம்,
அரக்கோணம் - திருப் பதி ரெயில் பாதை யில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று ரெயிலில் அடிபட்ட நிலையில் தண்டவா ளம் அருகே இறந்து கிடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த மான் உடலை மீட்டு இது குறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை அரக்கோணம் கால்நடை மருத்துவரின் பிரேத பரி சோதனைக்கு பின்னர் அப்பகுதியிலேயே எரியூட்டினர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த போது கடந்த 15 நாட்களில் இதுவரை ரெயிலில் அடிபட்டு சுமார் 7 மான்கள் வரை இறந்திருக்கும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண் டும். என்று தெரிவிக்கின்றனர்.
திருமங்கலம் அருகே ரெயில் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை இரை தேடிச்சென்ற 5 வயது ஆண் புள்ளிமான் அப்பகுதியில் இருந்த ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஆண் புள்ளிமான் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானது.
மான் இறந்ததைக் கண்ட ரெயில்வே ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் அதே பகுதியில் புதைத்து சென்றனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 வயது ஆண் புள்ளிமான் ரெயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
தொடர்ந்து இப்பகுதியில் அதிகப்படியான மான்கள் உயிரிழக்கும் சூழல் நிலவுவதால் வனச் சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






