என் மலர்
ராணிப்பேட்டை
ஆற்காட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தண்டுகாரன் தெருவைச் சேர்ந்த ஜெமினி (வயது 21), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா அருகே பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் பாமா (வயது 45). இவர் தனது வீட்டின் முன்பு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள், பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், ஒரு பவுன் கோதுமை செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 47) தொழிலாளி. திருமணமாகாதவர். இவர் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மன உளச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் ஊராட்சி சீனிவாசபுரம் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது.
கல்லூரி அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த திருட்டு கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
எந்திரத்தை உடைக்க முடியாததால் தாங்கள் கொண்டு வந்திருந்த வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? அல்லது வேறு நபர்கள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில் கடந்த 15-ந்தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ 8.50 லட்சம் பணம் வைக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுத்துள்ளனர். மீதி இருந்த எவ்வளவு பணம் கொள்ளைபோனது என தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? அல்லது வேறு நபர்கள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்...ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு
நெமிலி, திமிரி, ஆற்காடு பகுதியில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை:
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பாணாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜி.வி.சி. கல்வியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் பார்வையிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
நெமிலி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குச்சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் மொத்தம் 50 மேஜைகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குகளுக்கு 33 மேஜைகளும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாக்குகளுக்கு தலா 20 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.
திமிரி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குச்சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் மொத்தம் 40 மேஜைகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சீ்ட்டுகளுக்கு 26 மேஜைகளும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளுக்கு 18 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.
ஆற்காடு ஒன்றியத்தில் பதிவாகும் வாக்கு சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் மொத்தம் 40 மேஜைக்களும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளுக்கு 26 மேஜைகளும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளுக்கு தலா 18 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து செல்ல தனித்தனி பாதைகள் அமைக்க வேண்டும். வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லவும், வாக்குகளை தனித்தனியாக பிரிக்கும் அறைக்கு கொண்டு செல்லவும் தனித்தனி பாதைகள் அமைக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் குமார், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் புகழேந்தி, பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சீனிவாசன், சாந்தி, தாசில்தார்கள் ரவி, ஷமிம், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிக்கன்பக்கோடா வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே பாணாவரத்தை அடுத்த கோவிந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 45). சிக்கன் பக்கோடா கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கங்கா (40). இவர்களுக்கு சிதம்பரம் (19) என்ற மகனும், 17வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதே பகுதியில் வசிக்கும் பங்காளி உறவு முறையான கிருஷ்ணன் (75) குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு உனேஷ் (35) அன்பு (32) என்ற மகன்கள் உள்ளனர்.
ரங்கநாதன் குடும்பத்தினருக்கும் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் இடையே நிலம் பாகப்பிரிவினை சம்மந்தமாக கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நிலம் பாகபிரிவினை பிரச்சினை தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது,
இதில் உமேஷ், அன்பு ஆகியோர் இரும்பு குழாயால் ரங்கநாதனை தாக்கினர். மேலும் கிருஷ்ணன், கிருஷ்ணவேணியும் அவரை உதைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ரங்கநாதனை மனைவி கங்கா, மகன் சிதம்பரம் ஆகியோர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே ரங்கநாதன் உடல்நிலை மோசமானதால் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். .அங்கு பரிசோதனை செய்தபோது ரங்கநாதன் ஏற்கனவே டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் கங்கா புகார் அளித்தார்.
அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் (75), மனைவி கிருஷ்ணவேணி (65) மகன்கள் உமேஷ் (35) அன்பு (32) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி. இவர் அடிக்கடி உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். 5-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி 760 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி 760 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் ஓடைகால்வாயில் தரைப்பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நந்தி மங்கலம் கிராமத்தில் 1,500 பேரும், ராமபுரத்தில் சுமார் 500 பேரும் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நந்திமங்கலம் ஏரி கடைவாசல் பகுதியில் போளிப்பாக்கத்திற்கு தண்ணீர் செல்லும் ஓடை கால்வாய், கட்டாரிக்குப்பம் செல்லும் வழியில் புலிவலம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் மற்றொரு கால்வாய், மயானத்திற்கு செல்லும் ஓடை கால்வாய் உள்ளது.
இந்த ஓடைக்கால்வாய் வழியாகத்தான் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் மற்றும் விவசாய பொருட்களை எடுத்துச்செல்கிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த கால்வாய் வழியாகத்தான் கொடைக்கல், கொடைக்கல் மோட்டூர் சென்று வருகின்றனர். மகப்பேறு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல பிரதான சாலையாகவும் பயன்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் ஏரி நிரம்பி ஓடைக்கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இரண்டு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் வெள்ளத்தில் இறங்கிதான் செல்கின்றனர். இறந்தவர்களின் உடல்களையும் இந்த வழியாகத்தான் எடுத்து செல்ல வேண்டும்.
பொங்கல் அன்று சோளிங்கர் யோக நரசிம்மர் உற்சவ சாமியை மண்டப சேவைக்காக இந்த கால்வாய் வழியாகத்தான் எடுத்துவரவேண்டும். ஆனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த வழியாக செல்லமுடியாமல் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஓடை கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிலும், கலெக்டரிடமும் பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓடை கால்வாய்களை ஆய்வு மேற்கொண்டு, அளவீடு பணிகள் நடைபெற்றது.
இந்தநிலையில் ஆந்திரமாநிலம் சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பியது. நந்தி மங்கலம் ஏரி நிரம்பி ஓடை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகமாக சென்றால் புலிவலம் வழியாக கட்டாரிக்குப்பம், கொடைக்கல் என சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஓடைக்கால்வாயில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அகரம்கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற போர்மேன் (வயது 32). இவா், கெங்காபுரம் பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷை கைது செய்தனர்.
பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாப்பேட்டை அணைக்கட்டு நீர்த்தேக்கத்தில் இருந்து காவேரிப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும், தமிழக ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பொன்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சித்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 4,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளநீர் மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலந்து ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் வாலாஜாப்பேட்டை அணைக்கட்டை நிரப்பி வருகிறது.
வாலாஜாப்பேட்டை அணைக்கட்டில் இருந்து மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரிக்கு 818 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 122 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 73 கன அடி, தூசி ஏரிக்கு 409 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாலாஜா அணைக்கட்டுக்கு வரும் நீரின் வரத்து மற்றும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் புதுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை அரக்கோணம் - திருத்தணி ரெயில் மார்கத்தில் உள்ள மங்கமாபேட்டை ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.