search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நெமிலி, திமிரி, ஆற்காடு வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

    நெமிலி, திமிரி, ஆற்காடு பகுதியில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
    ராணிப்பேட்டை:

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ‌பாணாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜி.வி.சி. கல்வியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

    இந்த வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் பார்வையிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    நெமிலி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குச்சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் மொத்தம் 50 மேஜைகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குகளுக்கு 33 மேஜைகளும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாக்குகளுக்கு தலா 20 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.

    திமிரி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குச்சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் மொத்தம் 40 மேஜைகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சீ்ட்டுகளுக்கு 26 மேஜைகளும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளுக்கு 18 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.

    ஆற்காடு ஒன்றியத்தில் பதிவாகும் வாக்கு சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் மொத்தம் 40 மேஜைக்களும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளுக்கு 26 மேஜைகளும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளுக்கு தலா 18 மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து செல்ல தனித்தனி பாதைகள் அமைக்க வேண்டும். வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லவும், வாக்குகளை தனித்தனியாக பிரிக்கும் அறைக்கு கொண்டு செல்லவும் தனித்தனி பாதைகள் அமைக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் குமார், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் புகழேந்தி, பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சீனிவாசன், சாந்தி, தாசில்தார்கள் ரவி, ஷமிம், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×