என் மலர்

  செய்திகள்

  உடைக்கப்பட்ட ஏடிஎம்
  X
  உடைக்கப்பட்ட ஏடிஎம்

  வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  அரக்கோணம்:

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் ஊராட்சி சீனிவாசபுரம் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது.

  கல்லூரி அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் நேற்று இரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த திருட்டு கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

  எந்திரத்தை உடைக்க முடியாததால் தாங்கள் கொண்டு வந்திருந்த வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

  இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் கடந்த 15-ந்தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ 8.50 லட்சம் பணம் வைக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுத்துள்ளனர். மீதி இருந்த எவ்வளவு பணம் கொள்ளைபோனது என தெரியவில்லை.

  விசாரணை நடத்திய போலீசார்

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? அல்லது வேறு நபர்கள் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

  எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×