என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
    • உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்ற 70 - க்கும் மேற்பட்ட பயனாளிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் ( ஊராட்சி ) லோகநாயகி வீடு ஒதிக்கீடு பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .

    இதில் கலந்து கொண்ட பயனாளிகளி டம் வீடுகட்டாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து , ஆலோசனை வழங்கி விரைவாக வீடு கட்டி முடிக்க வேண் டும் என அறிவுறுத்தினார் . நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் , நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேத முத்து , சிவராமன் , பணி மேற்பார்வையாளர் விஜயகுமார் , துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    சோளிங்கர்

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.

    முதல் நாள் சிறப்பு பிரிவினர்களுக்கு மட்டும் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும், 11-ந் தேதி பி.எஸ்.சி கணினி அறிவியல் (கட் ஆப் மதிப்பெண் 400-ல் இருந்து 248 வரை), 12-ந் தேதி கணிதம் (கட் ஆப் 400 -ல் இருந்து 173 வரை) 16-ந் தேதி பி.காம் வணிகவியல் (கட் ஆப் 400-ல் இருந்து 231 வரை) 17-ந் தேதி பி. ஏ ஆங்கிலம் (கட் ஆப் 100 -ல் இருந்து 54),18-ந் தேதி பி.ஏ தமிழ் (கட் ஆப் 100 -ல் இருந்து 70 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் அசல் மற்றும் 5 நகல்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் .சேர்க்கை பெற்ற மாணவர்கள் அன்றே சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
    • வங்கியில் கடன் உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்

    அரக்கோணம்

    அரக்கோணம் அடுத்த செம்பேடு ஊராட்சி குருராஜப்பேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு விற்பனையாளர் சங்கம் சார்பில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெசவாளர்கள் 16 பேருக்கு தல ரூ.50,000 விதம் வங்கியில் கடன் உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா பிரபு ,அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சவுந்தரராஜன், கூட்டுறவு சங்க தலைவர் கீதா தமிழ்மணி, துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் அகமது பாஷா ,துணை ஆய்வாளர் செல்வகணேஷ் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    1974-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்ட தேசிய கொடியை இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருவதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் காண்பித்து அது குறித்து விவரங்களை எடுத்துரைத்தனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி நடக்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வாழப்பந்தல் சாலையில் உள்ள குத்து சண்டை பயிற்சி பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் சமீபத்தில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

    மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தன்று வாலாஜா மேல்நிலைப் பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது.

    அதை முன்னிட்டு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் அப்துல் அக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்சியாளர்கள் கிருஷ்ணன், ரகு, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 75 தொழிலாளர்கள் ரத்ததானம் வழங்கினர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் உள்ள அல்ட்ராமரைன் மற்றும் பிக்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வடிவேலன், வைத்தியலிங்கம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 தொழிலாளர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் அருள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாக மேலாளர் ரவி நன்றி கூறினார்.

    • 8-வது தேசிய கைத்தறி தின விழாவில் கலெக்டர் பெருமிதம்
    • முத்ரா திட்டத்தில் ரூ.15.40 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த குருராஜப்பேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க சார்பாக 8-வது கைத்தறி தின விழா நடைபெற்றது.

    இதில் வேலூர் சரக துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் அகமது பாஷா தலைமை வகித்தார். அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் முன்னிைல வகித்தார்.

    கோ அப்டேட்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் கீதா தமிழ்மணி வரவேற்றார்.

    விழாவில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெசவாளருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தல 50,000 வீதம் சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காண கடன் உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தும் முறையை வளர்க்க வேண்டும் நிகழ்ச்சிகளில் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான கைத்தறி துணிகளை கொடுத்து வரவேற்கும் கலாச்சாரத்தை நாம் பழக்க வேண்டும் வெளிநாட்டு பொருட்களை துணிகளை வாங்குவது தவிர்க்க வேண்டும் நெசவாளர்களுக்கு தேவையான அனைத்து கடன் உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

    ராணிப்பேட்டை மாவட்டம் நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம் பனப்பாக்கம் நிகழ்ச்சி நடக்கும் இந்த குருராஜப்பேட்டை போன்ற பகுதிகளில் கைத்தறி துணி என்பது பல காலங்களமாக மிகவும் பிரபலமானது பண்டிகை காலங்களில் என்னுடைய தகப்பனார் பணப்பாக்கம் பகுதிசென்று கைத்தறி துணிகளை தேடி வாங்கி வந்து எங்களுக்கு உடுத்துவார்.

    கைத்தறி ஆடைகளை அணிந்து வளர்ந்தவன் நான் இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து இலவச மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பிடியோ வெங்கடேசன் மாவட்ட கவுன்சிலர் அம்பிகா ஒன்றி கவுன்சிலர் பாலன் ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் குப்புசாமி தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதன்படி ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை யொட்டி உற்சவமூர்த்தியான பக்தோசிதப் பெரு மாள் , உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள தங்க கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும். களையப்பட்டு சிலைகளின் தன்மை, கவசத்தின் நிலை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் மூலம் வெள்ளி கலசத்தில் வைக்கப் பட்டிருந்த புனித நீரால் உற்சவர் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை தங்க கவசம், திருவாபர ணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அருள்பா லித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    ராணிபேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகம் முன்பு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் பூங்காவனம், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத்,குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக முத்துக்கடை,நவல்பூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    • துண்டு பிரசுரம் வினியோகம்
    • காவல்துறை சார்பில் ஏற்பாடு

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகர காவல் துறை சார்பில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எஸ்.ஆர். கேட், ெரயில் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தமிழக அரசால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் மாணவர்களை பெற்றோர்கள் போதை பொருட்கள் ஏதேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் பெற்றோர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    • மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் நடந்தது
    • மவுன அஞ்சலி செலுத்தினர்

    ஆற்காடு:

    வாலாஜாபேட்டையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வன்னிவேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வெளியே வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் கழக தலைவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளருமான சக்திவேல்குமார் தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் 5 நிமிடம் திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை ஏதிரே வாலாஜாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சக்திவேல்குமார் துணைத்தலைவர் பாலாஜி ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் கிளை செயலாளர் நிலவுராஜன் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெய் சுரேஷ் பிச்சைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவையொட்டி நடக்கிறது
    • தமிழக காங்கிரஸ் தலைவர் ேக.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா முன்னிட்டு நடை பயணம் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்டச் செயலாளர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற 13-ந் தேதி அன்று 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா முன்னிட்டு நடைபயணம் யாத்திரை நடைபெற உள்ளது.

    இந்த யாத்திரையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த யாத்திரையில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த யாத்திரை சிறப்பாக நடைபெற அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்எ ன கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • 63 நாட்கள் 1157 கி.மீ நடை பயணம்
    • உலக மக்களின் நலன் காக்க வேண்டி யாத்திரை

    அரக்கோணம்:

    வலையபட்டி சித்தர் பச்சைகாவடிஐயா அவர்கள் ஆறுபடை வீட்டிற்கு 63 நாட்கள் 1157 கி.மீ பாதயாத்திரையாக நடை பயணம் மேற்கொண்டு அரக்கோணம் வழியாக திருத்தணி முருகன் கோயில் வந்தடைந்தார்.

    உலக மக்களின் நலனுக்காக மழை வேண்டி மக்கள் பெரும் தொற்றில் இருந்து விடுபட ஆனை முகத்தான் திருவடிகளை வேண்டி முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டிற்கு ஐந்தாவது முறையாக ஆன்மீக பாதயாத்திரை செல்கிறார்.

    பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, அரக்கோணம், வழியாக ஆறுபடைவீடு திருத்தணி வந்தடைந்தார்.

    ×