குத்துச்சண்டை போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

சுதந்திர தினத்தையொட்டி நடக்கிறது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குத்துச்சண்டை போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வாழப்பந்தல் சாலையில் உள்ள குத்து சண்டை பயிற்சி பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் சமீபத்தில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தன்று வாலாஜா மேல்நிலைப் பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது.

அதை முன்னிட்டு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அப்துல் அக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்சியாளர்கள் கிருஷ்ணன், ரகு, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com