என் மலர்
நீங்கள் தேடியது "Cannabis awareness"
- துண்டு பிரசுரம் வினியோகம்
- காவல்துறை சார்பில் ஏற்பாடு
அரக்கோணம்:
அரக்கோணம் நகர காவல் துறை சார்பில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எஸ்.ஆர். கேட், ெரயில் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தமிழக அரசால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் மாணவர்களை பெற்றோர்கள் போதை பொருட்கள் ஏதேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் பெற்றோர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.






