என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வாலாஜா பி.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். சுந்தரேசன், ஜீவா, கவிதா, தீபா, மைதிலி, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய துணை தலைவர் குபேரன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் கலைசெல்வி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டதினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் வனிதா நன்றி கூறினார்.

    • மாணவர்கள் அவதி
    • பொதுமக்கள் புகார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோடம்பாக்கம் அரசு துவக்கப்பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

    பள்ளி கட்டிடம் இடிப்பு

    ஊராட்சி ஒன்றிய குழு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மின்சார வசதியும் இல்லை மற்றும் மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என மாணவர்கள் புகார் அளித்துள்ளர்.

    மேலும் ஏற்கனவே இருந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி அதன் கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்

    மாணவர்கள் குழந்தைகள் அந்த வழியாக செல்லும் போது சிராய்ப்பு ஏற்படுகிறது. உடனடியாக கட்டிட கழிவுகளை அகற்றி மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது
    • கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் சுதந்திர தினமான 15-ந் தேதி காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும்.

    அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படக்கூடிய பொருட்கள் விவரம் வருமாறு :-

    ஏப்ரல் முதல் ஜூலை வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளில் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊடகம்), விரிவான கிராம சுகாதாரத் திட்டத்தை பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை -உழவர் நலத்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி, மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இலக்குப் பட்டியலில் உள்ள ஏழை, மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றவர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மழைநீர் சேகரிப்பு, வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணைய வழி செலுத்துதல் உள்ளிட்டவை ஆகும்.

    கிராமசபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும்.கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • அம்ரித் சரோவர் மிஷன் திட்டத்தில் ஏற்பாடு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    கடந்த 24.4.22-ந் தேதி தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமரால் அம்ரித் சரோவர் மிஷின் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 குளங்கள் புதிதாக உருவாக்குதல் மேம்பாடு ஆகும்.

    14 கிராமங்களில் குளங்கள் அமைப்பு

    ஒவ்வொரு குளங்களும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவிலும், சுமார் 10 ஆயிரம் கன மீட்டர் நீர் தேங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்ரித் சரோவர் இலக்கு 56 ஆகும்.

    பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்

    மேலும் 25 சதவீத இலக்கை வருகிற 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 15 வது நிதி குழு மானியம், கனிம நிதி மற்றும் கிராம பஞ்சாயத்து பொது நிதியின் மூலம் 14 குளங்கள் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் விவரம் வருமாறு:-

    அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர், நெமிலி ஒன்றியம் உளியநல்லூர், பின்னாவரம், பள்ளூர், அரிகிலப்பாடி, சோளிங்கர் ஒன்றியம் புலிவலம், பாண்டியநல்லூர், ஆற்காடு ஒன்றியம் ஆயிரம், மேச்சேரி, திமிரி ஒன்றியம் ஆணைமல்லூர், வளையாத்தூர், வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம், தென்கடப்பந்தாங்கல், அனந்தலை ஆகிய ஊராட்சிகளில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கருத்து கேட்பு கூட்டம் நடந்தது
    • பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் தனியார் திருமண மண்டபத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கருத்துக்கேட்பு கூட்டம்

    நிகழ்ச்சியில் நெமிலி தாசில்தார் ரவி தலைமை தாங்கினார். ஓச்சேரி-அரக்கோணம் சாலை விரிவாக்கம் புறவழிச்சாலை குறித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புற வழிச் சாலையாக பிரிந்து ஓச்சேரி வழியாக பனப்பாக்கம், நெமிலி சென்று அரக்கோணம் வரை செல்லும் சாலை இருவழி சாலையாக உள்ளது.இதனை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய உள்ளது.

    இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு தாசில்தார் ரவி கேட்டுக்கொண்டார். மேலும் இதில் வியாபாரிகள் சங்க தலைவர் விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர் சுபாஷ் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • போலீசார் சிறையில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயதுடைய சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுவனின் தந்தை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • மின் கம்பிகளை ஊழியர்கள் அகற்றினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் பழமை வாய்ந்த மரம் ஒன்று இருந்தது.

    இது காய்ந்து போன நிலையில் இருந்ததால் திடீரென மின் கம்பி மீதும், போலீஸ் நிலையம் மீதும் திடீரென விழுந்தது. இதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றி மீண்டும் மின் இணைப்பு வழங்கினர்.

    • 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பே ட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கபுரம் ெரயில்வே நிலையத்தில் ரேசன் அரிசி கடத்த ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் ெரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு படை உதவி ஆய்வாளர் கேமன் குமா ர தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பாரம் அருகே முட்புதரில் 22 அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

    பின்னர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 5 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58) இவர் தனது வீட்டின் முன்பு சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் டீ கடை திறந்தார்.

    இவரது கடைக்கு டீ குடிக்க ராதாகிருஷ்ணன் (55), வேலு (62), மற்றொரு வேலு (42) சேகர் (60 ஆகியோர் டீ குடிக்க வந்தனர். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது.

    மளமளவென தீ பரவியது. இதில் டீக்கடைக்குள் இருந்த 5 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ராராகிருஷ்ணன், செல்வராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சேகர், சேட்டு, வேலு ஆகியோர் லேசான காயம் ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்த விஏஓ, சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    • பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
    • 50-க்கும் மேற்பட்டோர் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த திடீர் நகர் பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்தக் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இந்நிலையில் ஆடிமாத தீமிதி திருவிழா கடந்த 5 ம் தேதி தொடங்கியது.இதனையடுத்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    மேலும் பக்தர்கள் கூழ் வார்த்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    ஏராளமான அக்கம் பக்கத்து கிராம மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பாரதிமணி, தம்பா, கன்னியப்பன், ஜெயபால் உள்ளிட்டோர் செய்தனர்.

    • வருகிற 12,26-ந் தேதிகளில் நடக்கிறது
    • பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதனடிப்படையில் இம்மாதத்தில் வரும் 12.8.2022 மற்றும் 26/8/2022 ஆகிய நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

    இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    கல்விதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12-ம் தேதி 26-ம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • பணி நேரத்தை மாற்றியதற்க்கு எதிர்ப்பு
    • 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வண்டி மேட்டு சாலையிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்கான பணி நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். அப்போதிலிருந்து இது நடைமுறையில் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது மேற்கண்ட இந்தப் பணி நேரத்தை மாற்றி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற கோரியும், பழைய நேரத்தை அறிவிக்குமாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க துணைத் தலைவர் மருத்துவர் வேலு ரங்கநாதன், சங்க பொருளாளர் மருத்துவர் வெங்கடேஸ்வரன் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஆண் பெண் மருத்துவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ×