என் மலர்
உள்ளூர் செய்திகள்
இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்
- மாணவர்கள் அவதி
- பொதுமக்கள் புகார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோடம்பாக்கம் அரசு துவக்கப்பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடத்தை கட்டியுள்ளனர்.
பள்ளி கட்டிடம் இடிப்பு
ஊராட்சி ஒன்றிய குழு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மின்சார வசதியும் இல்லை மற்றும் மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என மாணவர்கள் புகார் அளித்துள்ளர்.
மேலும் ஏற்கனவே இருந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி அதன் கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்
மாணவர்கள் குழந்தைகள் அந்த வழியாக செல்லும் போது சிராய்ப்பு ஏற்படுகிறது. உடனடியாக கட்டிட கழிவுகளை அகற்றி மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.








