என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் திரும்பிய போது பா.ஜ.க.வினர் காரை மறைத்து செருப்பை வீசினர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொன்போஸ்கோ தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் காந்தி சிலை அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் செய்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்தனர்.

    மேலும் நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியவரை கைது செய்ய வலியுத்தியும், பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர்.

    இதில் நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், குமார், கோபிகிருஷ்ணன், நகரஅவைத்தலைவர் தமோதரன், நகர நிர்வாகி வையாபுரி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் யுவராஜா, பாலாஜி, ராம்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதனால் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் உத்தரவு
    • விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலை வழக்கில் நடவடிக்கை

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்தசாரதி (34) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆற்காடு சட்டமன்ற இளைஞர் எழுச்சி பேரவை செயலாளராக இருந்தார். கடந்த ஜூலை 17 தேதி இருசக்கர வாகனத்தில் செய்யாத்துவண்ணம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள சுடுகாடு அருகே உள்ள நிலத்தில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளான அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் (20), ராஜேஷ் (43) ஆகியோர் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ராஜேஷ், சதீஷ்குமார் அவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    14 மூட்டை சிக்கியது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நேற்று வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆற்காடு பைபாஸ் சாலை ஓரத்தில் 14 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலாஜா நுகர் பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாற்றங்கரை யோரம் உள்ள சாதிக் பாஷா நகரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.

    இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 75 புதிய நீர்நிலைகள் உருவாக்க திட்டம்
    • சு.ரவி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாலயன்கோட்டை பகுதியில் அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 புதிய நீர்நிலை குளம் குட்டைகள் உருவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் அருகில் பாடி ஊராட்சியில் புதிய குளம் வெட்ட அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ஒன்றிய கவுன்சிலர் வினோத் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருகில் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வல்லிக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடிமாத கஜேந்திர தங்க கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கருட சேவை முன்னிட்டு விடியற்காலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை பக்தோசிதப்பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத்தெரு, போஸ்ட் ஆபீஸ் ஆகிய நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.

    இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 9 மணிக்குள் நோட்டமிட்டு வழிப்பறி
    • வட மாநில வாலிபர் கைது

    ஆற்காடு:

    அசாம் மாநிலம் ஜாகிரோத் பகுதி மவுரிகயூன் கிராமத்தை சேர்ந்தவர் அசின் அலி (வயது 21).இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் செய்யாறு வந்தார்‌.

    ஓட்டல் தொழிலாளி

    அங்கு ஒரு ஓட்டலை வாடகைக்கு எடுத்து நடத்தினார். ஓட்டல் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் அதே ஓட்டலில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.

    பகல் நேரங்களில் ஓட்டலில் வேலை பார்த்த அசின் அலி காலை 6 மணி முதல் 9 மணி வரை தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிக்க திட்டமிட்டார்.

    செயின் பறிப்பு

    இதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை பைக்கில் சென்று தனியாக நடந்த செல்லும் பெண்களை நோட்டமிட்டு வந்தார்.

    ஆற்காடு அடுத்த மாங்காடு பஸ் நிறுத்தத்திலிருந்து தோல் தொழிற்சாலை வேலைக்கு நடந்து சென்ற மாலதி என்ற பெண்ணிடம் கடந்த மாதம் 3 பவுன் தங்கச் செயின் பறித்தார்.

    அதேபோல் சாத்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருந்த ஞான சவுந்தரி என்பவரிடம் 4 பவுன் செயின் பறித்து தப்பி சென்றார்.

    இதனை தொடர்ந்து கடப்பந்தாங்கல் கோவில் அருகே நடந்து சென்ற சாவித்திரி என்பவரிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.

    இதில் ஒரு செயினை அவரது நண்பர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருந்தார். ஒரு செயினை வீட்டில் பதுக்கினார். மற்றொரு செயினை பைக்கிலேயே வைத்துக் கொண்டு அடகு வைப்பதற்காக சுற்றி திரிந்தார்.

    அடுத்தடுத்து நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து ஆற்காடு தாலுகா போலீசில் பெண்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பெண்களிடம் விசாரணை நடத்தியதில் சிவப்பு நிற பைக்கில் வந்து வாலிபர் செயின் பறித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இந்த சம்பவத்தில் ஒரே வாலிபர் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    சிவப்பு நிற பைக் குறித்து ஆற்காடு டவுன் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் டிஎஸ்பி பிரபு மேற்பார்வையில் ஆற்காடு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    ஆற்காடு அடுத்த புதுப்பாடி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனை செய்த போது சிவப்பு நிற பைக்கில் வந்த அசின் அலியை மடக்கிப் பிடித்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர் 3 பெண்களிடம் செயின் பறித்தது தெரியவந்தது.

    அவரிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அசின் அலியை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோட்டில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலில் 43ம் ஆண்டு ஆடி வெள்ளி விழாயொட்டி 1001 பெண்கள் பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பஸ், லாரி, உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பயணிகள் ஆட்டோ, லோடு ஆட்டோ உரிமையாளர்கள் நகர கிராம பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இத்திருவிழாவை நடத்துவார்கள். அதன்படி ஆடி முதல் வெள்ளியன்று கொடியேற்றம் மற்றும் பந்தகால் நடும் நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.ஆடி 4-ம் வெள்ளியான இன்று காப்பு கட்டிய பக்தர்கள் பாலாற்றங்கரையில் இருந்து கரத்துடன் 1001 பால்குடம் ஏந்தி அலகு குத்தி ஊர்வலமாக வன்னிவேடு மோட்டூர், அணைக்கட்டு ரோடு, எம்.பிடி ரோடு, வாலாஜா பேருந்து நிலையம், சோளிங்கர் ரோடு வழியாக கோயில் வந்தடைந்தனர்.

    அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை தீபாராதனை நடைபெற்றது.நிகழ்ச்சியில் பக்தர்கள், ஊர் பொதுமக்கள், தொழிலதிபர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து இன்று மாலை முக்கிய வீதிகளின் வழியாக பம்பை, சிலம்பாட்டம், கரகாட்டம், வாணவேடிக்கையுடன் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பஸ், லாரி, ஆட்டோ, கார் போன்ற வாகனத்தை இழுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

    வருகிற 14ம் தேதி அம்மனுக்கு கூழ்வார்த்தலும் பொங்கல் இடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • ஒருவர் தப்பி ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த செங்கல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவரது வீட்டில் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை திருடி சென்றனர்.இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் செய்தார்.

    ரெண்டாடி கிராமம் பச்சையம்மன் கோயில் அருகே சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் வேகமாக தடுத்து நிறுத்தி விசாரித்த போது பின்னால் உட்கார்ந்து இருந்த வாலிபர் போலீசாரை பார்த்தவுடன் ஓடிவிட்டார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை விசாரணை செய்ததில் அவர் சித்தூர் மாவட்டம் திமிதிபாளையம் ஊரை சேர்ந்த பவன் (வயது 22) என்பது தெரிந்தது. மேலும் விசாரணை செய்த போது அவர் தப்பி ஓடிய வினோத் என்பவர் குப்புக்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அவர் ஊர் திருவிழாவுக்கு ஜூலை 23ஆம் தேதி நண்பர் என்ற முறையில் வந்த போது செலவுக்கு பணம் இல்லாததால் குப்புக்கல்மேடு அருகே உள்ள செங்கல்நத்தம் கிராமத்தில் ராணி வீட்டில் இருந்த நாலு வெள்ளாடுகளை திருடி சென்றதும் அதை அவர் ஊரில் பதித்து வைத்திருப்பதையும் தெரிவித்தார்.

    அது அறிந்த போலீசார் அந்த நாலு வெள்ளாடுகளையும் பறிமுதல் செய்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து பவனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

    • ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
    • சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் அடுத்த ரங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    ஒரு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் என இருவர் பணிபுரிந்து வரும் நிலையில் தலைமையாசிரியர் மீது ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

    மாணவர்களிடம் அரசு இலவசமாக கொடுக்கும் நோட்டு புத்தகங்கள் சீருடை வழங்க பணம் வசூலிப்பதாகவும் தனது வண்டி காரை துடைக்க சொல்லி வேலை வாங்குவதாகவும் மற்றும் பள்ளி கழிவறையை பயன்படுத்த கூடாது என பூட்டு போட்டு வெளியில் குளக்கரை அருகே சென்று வருமாறு கூறுவதாக பல குற்றச்சாட்டுகள் இவர் மீது விழுந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளை மாணவர்களை கொண்டு அகற்ற சொல்லியுள்ளார். அதனால் செடியில் உள்ள பூச்சிகள் கடித்து மாணவர்களுக்கு பூச்சிக்கடி அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    • ஏராளமானோர் பங்கேற்பு
    • பொதுமக்களுக்கு ராக்கி கட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர பாஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சி நகர தலைவர் வழக்கறிஞர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சோனியா பொதுக்குழு உறுப்பினர் கோமதி, பொதுச்செயலாளர் அருணா, நகரபொருளாளர் சுமங்கலி, நகர செயற்குழு உறுப்பினர் வரதராஜன் நகர மகளிர் அணி லோகேஸ்வரி முன்னாள் மாவட்ட பிரச்சார அணி சீனிவாசன் ஆகியோர்.

    75வது சுதந்திர தினத்தை சகோதரத்துவத்தை வலியுறுத்தி ரக்க்ஷா பந்தன் காவல் ஆய்வாளர் முருகானந்தம் காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் ரவி, மற்றும் காவலர்களுக்கும் தொடர்ந்து அஞ்சலகத்தில் காந்தி சிலை பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு ராக்கி கட்டி வாழ்த்துக்கள் தெறிவித்தனர்.

    • கலெக்டர் பங்கேற்பு
    • ஏழை எளிய மக்கள் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயனடைய வாய்ப்புள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மஹாலில் வாழ்ந்துகாட்டும் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இணை மானிய திட்டம் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இணை மானிய திட்டம்

    கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயனடைய வாய்ப்புள்ளது அவர்களையும் தொழில்முனைவோராக்க உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும். குழுத்தொழில் உருவாக்கம் அதன் மூலம் ஏழை மகளிர் முன்னரே வாய்ப்புள்ளது.

    வங்கிகள் தொழில்முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வேண்டும். இணை மானிய திட்ட விளக்கம், விண்ணப்பிக்கும் முறை, திட்டத்தின் செயபாடுகள் குறித்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

    வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் செயல்படும் 227 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து தொழில் முனைவோர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டதினை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆலியமா ஆபரஹாம், மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு நவநீதகிருஷ்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டர்.

    ×