என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- கலெக்டர் உத்தரவு
- விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலை வழக்கில் நடவடிக்கை
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்தசாரதி (34) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆற்காடு சட்டமன்ற இளைஞர் எழுச்சி பேரவை செயலாளராக இருந்தார். கடந்த ஜூலை 17 தேதி இருசக்கர வாகனத்தில் செய்யாத்துவண்ணம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள சுடுகாடு அருகே உள்ள நிலத்தில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளான அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் (20), ராஜேஷ் (43) ஆகியோர் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜேஷ், சதீஷ்குமார் அவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.






