என் மலர்
நீங்கள் தேடியது "Government gives free note books and money to provide uniforms"
- ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
- சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் அடுத்த ரங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒரு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் என இருவர் பணிபுரிந்து வரும் நிலையில் தலைமையாசிரியர் மீது ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர் .
மாணவர்களிடம் அரசு இலவசமாக கொடுக்கும் நோட்டு புத்தகங்கள் சீருடை வழங்க பணம் வசூலிப்பதாகவும் தனது வண்டி காரை துடைக்க சொல்லி வேலை வாங்குவதாகவும் மற்றும் பள்ளி கழிவறையை பயன்படுத்த கூடாது என பூட்டு போட்டு வெளியில் குளக்கரை அருகே சென்று வருமாறு கூறுவதாக பல குற்றச்சாட்டுகள் இவர் மீது விழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளை மாணவர்களை கொண்டு அகற்ற சொல்லியுள்ளார். அதனால் செடியில் உள்ள பூச்சிகள் கடித்து மாணவர்களுக்கு பூச்சிக்கடி அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.






