என் மலர்
ராணிப்பேட்டை
- விவசாயி பலி
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த அப்துல் லாபுரம் பஜனை கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி ( வயது 50 ) விவசாயி . இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜம்புகுளம் கூட்டு ரோட்டில் இருந்து கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்கிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கேசவணங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள், முனுசாமி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்த தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- சுதந்திர தின விடுமுறை அளிக்காததால் நடவடிக்கை
- உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகள் கண்டெடுப்பு
ராணிபேட்டை:
சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக் கம்) ஞானவேல் தலைமை யில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய் வாளர்களுடன் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய விடு முறை தினமான நேற்று சுதந்திர தினத்தன்று கடை கள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படாதது என 182 நிறுவனங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கடைகள் மற்றும் நிறுவனங்களில் 57 முரண் பாடுகளும், உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண் பாடுகளும் ஆக மொத்தம் 124 முரண்பாடுகள் கண்ட றியப்பட்டு அந்நிறுவனங்க ளின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
- மீன் பிடித்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட் டம் பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலகதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாய கூலி தொழிலாளி.
இவரதுமகன் பிரதீஷ் ( வயது 12 ). பழையபாளையம் அரசு பள்ளியில் 7 - ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியில் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் விவசாய கூலி தொழிலாளி. இவ ரது மகன் அன்பரசு ( 15 ) , பாணாவரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு படித்து வந்தான். இருவரும் அருகருகே வீடுகளில் வசித்து வருவதால் சிறுவயது முதல் நண்பர்க ளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று விடு முறை என்பதால் அருகில் உள்ள ஏரிக்கு சென்று கரை யின் ஓரத்தில் அமர்ந்து மீன் பிடித்தனர். அப்போது கால் வழுக்கி ஏரி யில் விழுந்து நீரில் முழ்கிய தாக கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்தவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து ஓடிவந்த கிராம மக்கள், நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு பிரதீஷை பாணாவரம் அரசு மருத்துவமனையிலும், அன்ப ரசை தனியார் மருத்துவம னையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோத னைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாணவர் கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
- அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் தகவல்
அரக்கோணம்:
அரக்கோணம் மின் கோட் டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப், தணிகைபோளூர், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை அரக் கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தினத்தையொட்டி கண்காணிப்பு தீவிரம்
- மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்
அரக்கோணம்:
சுதந்திரதின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாடெங்கும் பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரெயில் நிலை யங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளையும், பார்சல் அலுவலகம், பயணிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றிலும் ரெயில், தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர்.
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே உள்ள முடிதிருத்தும் கடைக்கு சென்ற மாரிமுத்து, அங்கு நேற்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என்ற நபருக்கும், மாரி முத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து முடி திருத்தும் கடையில் இருந்த கத்தியை கொண்டு மைக்கேல், மாரிமுத்து கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மாரிமுத்து கீழே விழுந்தார். உடனே, அவர் மீட்கப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்
- துப்பாக்கி, பைக் பறிமுதல்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையியலான வனத்துறை குழுவினர் நேற்று மாலை திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்குள்ள காப்புக்காட்டில் மான் ஒன்றை கும்பல் வேட்டையாடினர்.
வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர்.அதில் ஒருவரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் வேலூர் அடுத்த திருவலம் அருகே உள்ள ராமநாதபுரம் கிராத்தைச் சேர்ந்த சஞ்சீவி (35) என தெரியவந்தது.
வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் வனத்துறையினர் அவர்களிடமிருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை வன சரக அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:-
வன காப்பு காடுகளில் அத்து மீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடினாலோ குறிப்பாக மான் கறியை விற்றாலோ வாங்கினாலோ அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
- கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை
75-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திரத் தின நிகழ்ச்சியானது ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி. தீபா சத்யன் ஆகியோர் போலீஸ் அணி வகுப்பு மரியதையை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து வருவாய் துறை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஊரக வளர்ச்சி துறைகளின் சார்பாக 237 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 69,092 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- 101 பால்குட ஊர்வலம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 16 - ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு 101 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பாலாற்றங்கரையிலிருந்து பால் குடத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷோ கம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதனைதொடர்ந்து கரக ஊர்வலமும், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடத்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொ ண்டனர். மாலையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.
- சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனர்
- போலீசார், வருவாய்த் துறையினருடன் இணைந்து சோதனை
அரக்கோணம்:
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின ஊர்வலங்கள், விழாக்களை கட்டியுள்ளன. இதில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முக்கிய ெரயில் நிலையங்களான அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டையில் நேற்று மாலை 6 மணி முதல் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. ெரயில்வே போலீஸ் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ெரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வரும் 16-ம் தேதி காலை வரை 12 மணி நேரம் சுழற்சி முறையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ெரயில்வே தண்டவாள பாதைகளில் சதிச்செயல்களில் யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என்று ெரயில்வே போலீஸ் துறையினர் வருவாய்த் துறையினருடன் இணைந்து நடந்து சென்று சோதனை செய்ய உள்ளனர்.
ெரயில் நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் வெளியேறும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்கின்றனர். முக்கிய ெரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து ெரயில்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாளை காலை நடைபெற உள்ளது. இதையடுத்து, விழா நடைபெறும் மைதானங்கள் போலீஸ் துறையினரின் கட்டுப்பாட்டில் இன்று காலை கொண்டுவரப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
அதேபோல், வேலூர் கோட்டை மற்றும் கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் துறையினர் பாதுகாப்பு அளிப்பதுடன் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.
மேலும், தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தவும், மாவட்டங்களின் முக்கிய சந்திப்புகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 1,000 போலீசார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 போலீசார், திருப்பத்தூர் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
- கண்டக்டர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் 3 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு கும்பகோணம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காதிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி வேலூர் வழியாக செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று அங்கு வந்தது.
அதில் அவர் ஏறி பயணம் செய்தார். பஸ் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மாணவியின் அருகே பஸ்சின் கண்டக்டர் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதி மேட்டுத்தெருவை சேர்ந்த நீலமேகம் (வயது 46), அமர்ந்துள்ளார்.நள்ளிரவில் நீலமேகம் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். பஸ் வேலூரை வந்தடைந்ததும் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த விரைவு பஸ்சின் கண்டக் டர் மருத்துவக்கல்லூரி மாண விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 115 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இயங்கி வரும் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.
வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு ரத்ததான முகாமை நடத்தியது.
ஐ.என்.எஸ். ராஜாளி கமெண்டிங் அதிகாரி வினோத் குமார் முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு பிரிவு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்தம் வழங்கினர்.
115 யூனிட் ரத்தம் பெறப்பட்டு வாலாஜா அரசு மருத்துவர் டாக்டர் சுஜிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.






