என் மலர்
நீங்கள் தேடியது "The police arrested him and put him in Vellore Jail"
- மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
- கண்டக்டர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் 3 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு கும்பகோணம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காதிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து திருப்பதி நோக்கி வேலூர் வழியாக செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று அங்கு வந்தது.
அதில் அவர் ஏறி பயணம் செய்தார். பஸ் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மாணவியின் அருகே பஸ்சின் கண்டக்டர் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதி மேட்டுத்தெருவை சேர்ந்த நீலமேகம் (வயது 46), அமர்ந்துள்ளார்.நள்ளிரவில் நீலமேகம் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். பஸ் வேலூரை வந்தடைந்ததும் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த விரைவு பஸ்சின் கண்டக் டர் மருத்துவக்கல்லூரி மாண விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.






