என் மலர்
நீங்கள் தேடியது "ெரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார்"
- சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனர்
- போலீசார், வருவாய்த் துறையினருடன் இணைந்து சோதனை
அரக்கோணம்:
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின ஊர்வலங்கள், விழாக்களை கட்டியுள்ளன. இதில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முக்கிய ெரயில் நிலையங்களான அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டையில் நேற்று மாலை 6 மணி முதல் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. ெரயில்வே போலீஸ் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ெரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வரும் 16-ம் தேதி காலை வரை 12 மணி நேரம் சுழற்சி முறையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ெரயில்வே தண்டவாள பாதைகளில் சதிச்செயல்களில் யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என்று ெரயில்வே போலீஸ் துறையினர் வருவாய்த் துறையினருடன் இணைந்து நடந்து சென்று சோதனை செய்ய உள்ளனர்.
ெரயில் நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் வெளியேறும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்கின்றனர். முக்கிய ெரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து ெரயில்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாளை காலை நடைபெற உள்ளது. இதையடுத்து, விழா நடைபெறும் மைதானங்கள் போலீஸ் துறையினரின் கட்டுப்பாட்டில் இன்று காலை கொண்டுவரப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
அதேபோல், வேலூர் கோட்டை மற்றும் கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் துறையினர் பாதுகாப்பு அளிப்பதுடன் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.
மேலும், தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தவும், மாவட்டங்களின் முக்கிய சந்திப்புகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 1,000 போலீசார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 போலீசார், திருப்பத்தூர் மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.






