என் மலர்
ராணிப்பேட்டை
- வருகிற 22-ந்தேதி முதல் நடக்கிறது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி முதல் புதியதாக திறக்கப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இ- தொகுதி கூட்டரங்கில் நடைபெறும்.
பொதுமக்கள் ராணிப்பேட்டை, பாரதிநகர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கிற்கு வருகைதந்து கலெக்டரிடம் தங்களது மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறைதீர்வு மனுக்கள் அளிக்கவரும் பொதுமக்கள் எவரும் நவல்பூர், கெல்லீஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- ரூ.44 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது
- அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஸ் நிலையத்தில் தற்போது இடவசதி பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.இதற்கு மாற்றாக அதனை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனைதொடர்ந்து வாலாஜா நகராட்சி அலுவலக கட்டிடமும் இட நெருக்கடியால் போதிய இடவசதியின்றி இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சி அலுவலகத்தில் இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டனர்.
வாலாஜா பஸ் நிலையம் தற்போது இருக்கும் இடத்தினை மேம்படுத்திட 1.90கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவும் கூடுதலாக பஸ் நிலையம் கூரை அமைத்திட புதிய திட்ட அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையாளரை கேட்டுக்கொண்டனர். புதிய பஸ் நிலையம் கட்ட நகர எல்லை பகுதியில் இடம் தேர்வு செய்து வழங்கவும் கேட்டுக்கொண்டார்.
உடனடியாக பஸ் நிலையத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். வாலாஜா நகராட்சி அலுவலக கட்டிடம் அமைக்க நகராட்சி பகுதியில் அரசு இடம் 62 சென்டுள்ளது.
அந்த இடத்தில் புதிய கட்டிடம் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.
தற்போது இருக்கும் கட்டிடம் மாற்றி அமைக்கப்பட்டு வணிக வளாகம் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் வருவாய் கிடைக்கும்.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
புதிய பஸ் நிலையம் கட்ட வாலாஜா எல்லைப் பகுதியில் இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கையை அனுப்பிவைப்பது தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி ஆகியோர் கலந்தாலோசித்தினர்.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சியில் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள பிஞ்சி ஏரியிணை இயற்கை எழிலுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சமாக மாற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
புணரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் காந்தி மற்றும் பிஞ்சி ஏரி புணரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் காந்தி ஆகியோர் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோருக்கு எடுத்துரைத்தனர்.தற்போது ஏரி நீர்வளத்துதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.இதனை மாற்றிட துறைக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.பிஞ்சி ஏரி பொழுதுபோக்கு அம்ச இடமாக மாற்றிட ரூ.44 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இப்பணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் உடனே நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஏரி ஒப்படைத்திட தீர்மானம் நிறைவேற்றி அதனை பெற்று வழங்கிட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
- செயற்பொறியாளர் தகவல்
ராணிப்பேட்டைக்
வேலூர் மின்பகிர்மான வட் டம் , ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த ராணிப் பேட்டைதுணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராம ரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் ( சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ராணிப் பேட்டை நகரம், முத்துக் கடை, ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகு திகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை ராணிப் பேட்டை செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (வயது 42). பெயிண்டர்.
இவருக்கு நேற்று முன்தி னம் நள்ளிரவுதிடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் சிட்டி பாபுவை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிட்டிபாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி (23) நெல் அறுவடை எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார்.
வாலாஜா அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (34) இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தனித்தனி பைக்குகளில் படியம்பாக்கம் தனியார் கேஸ் குடோன் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவர்கள் வந்த பைக்குகள் மீது மோதியது.
இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நேதாஜி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மோகன் மேல்சி கிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்ப வம் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 8-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் ஆய்வு
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட் டுள்ள திருத்தேர் வெள்ளோட்டம் குறித்த பல்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்தினகிரி கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது .
தேர் வெள்ளோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 30 அடி உயரம் கொண்ட திருந்தேர் வெள்ளோட்டப் பெருவிழா அடுத்த மாதம் 8 - ந் தேதி நடைபெற உள்ளது.
திருந்தேர் வெள்ளோட்ட நிகழ்வுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருக்கோவில் மண்டபத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் பல்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில் பரம்பரை அறங்காவலர் பால முருகனடிமை சாமிகள் முன்னிலை வகித்தார். செயல் அலு வலர் சங்கர் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-
கோவில் மலையை சுற்றி சுமார் 1 கி.மீ தூரத்திற்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும்.இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கம்பி பாதைகளை தேர்ச்சொல்லும்போது பாதிப்படையாத வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை தேரின் உறுதி தன்மை ஆய்வு செய்து சான்று அளிக்கவும், திருத்தேர் வெள்ளோட்டத்தின் போது தேரில் மின்சாதனங்களை கொண்டு அலங்க ரிக்கும்போது விபத்து ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் வேக தடைகளை அகற்றி எளிதில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் தடுப்புகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜாபேட்டை தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் நடைபெறும் பகுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
- பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு
- அமைச்சர் காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் போதை பழக்கத்திற்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், டி.எஸ்.பி பிரபு, நகர செயலாளர் பூங்காவனம், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், வினோத், குமார், ஜெய்சங்கீதா அசேன் உள்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையம் முற்றுகை
- சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே பைக்கும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பைக் ஓட்டி வந்த விவசாயி பலியானார் . அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சோளிங்கர் போலீஸ் நிலையத்ததை முற்றுகையிட்டனர்.
சோளிங்கர் அடுத்த அப்துல்லா புரம் கிராமத்தை சேர்ந்தவர் முனு சாமி (56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஜம்புகுளம் கிராமத்தில் மாட்டுத்தீவனம் வாங்கிக்கொண்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டி ருந்தார் . கேசவனாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த முனுசாமி படுகாயமடைந்து அதே இடத்தில் பலியானார்.
தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் விபத்தில் பலியான முனுசாமி குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு சோளிங்கர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பேச்சு வார்த்தை நடத்தி, சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- கருவறைக்குள் கரையான் புற்றுக்கள் ஆக்கிரமிப்பு
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவே ரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இது பல வருடங்களாக பூஜைகள் எதுவும் செய்யாமல் பயன்பாடற்ற நிலையில் கோவில் சுவர்களில் மரம் வளர்ந்து பெரிய மரம் போல காட்சியளிக்கிறது மேலும் கோவில் கருவறைக்குள் கரையான் புற்றுக்கள் ஏராளமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
கோவில் கருவறைக்கு உள்ள சிலை சிதிலமடைந்து காணப்படுகிறது.
எனவே சிதிலமடைந்து கிடக்கும் கோவிலை புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கனல் கண்ணன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்
- 56 பேர் கைது
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி வேலூர் கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட செயலாளர்கள் மோகன், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை நசுக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
- கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கணவன்-மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- வாலிபரின் மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி கள்ளக்காதலியை இவர் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
இதனை அறிந்த அவரது மனைவி கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்தார். கடந்த ஒரு மாதமாக தம்பதிக்குள் இது தொடர்பாக கடும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்தது.
தனக்கு கணவர் துரோகம் செய்ததை நினைத்து தினமும் மனக்குமுறலில் வாலிபரின் மனைவி தவித்து வந்தார்.
நேற்று இரவு கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வாலிபர் வீட்டில் படுத்து தூங்கினார். கள்ளக்காதலை கைவிட மறுக்கும் கணவனை நினைத்து இளம்பெண் மன வேதனை அடைந்தார்.
நள்ளிரவில் மனக்குமுறலில் இருந்த இளம்பெண் ஆத்திரமடைந்தார். சரியான பாடம் புகட்டினால் மட்டுமே கணவன் திருந்துவார். தன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என முடிவு செய்தார்.
வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெந்நீரை கொதிக்க வைத்தார். ஆவி பறக்க கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு அவரது மர்ம உறுப்பில் வெந்நீரை ஊற்றினார்.
இதனால் வாலிபர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வாலிபரை மீட்டு பாணாவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வாலிபரின் மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தை மாத அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்
- இயந்திரத்தில் நெல் நாற்று நடப்பட்டது
நெமிலி:
நெமிலி தாலுகாவில் தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள் , கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்தி ரத்தில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர் . இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி தாலு காவுக்கு உட்பட்ட பகு திகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் , பெரும் பாலான விவசாயிகள் தங் களது விளை நிலங்களில் இயந்திரங்கள் மூலம் நெல் 55 நாற்று நடும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இதன் மூலம் தை மாத அறுவடைக்கு தயாராகி வருவதாகவும் , அதிக லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரி வித்தனர்.
இதுகுறித்து விவசாயி கள் கூறியதாவது:-
ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய் தால் , தை மாதத்தில் அறு வடை செய்யலாம் பயிர் களுக்கு தேவையான சூரிய ஒளியும் , பிராண வாயுவும் , நல்ல மழையும் கிடைத்து , விவசாயிகளுக்கு சிறப் பான கொடுக்கும் . கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண் . இறுகி கடின மாக மாறியிருக்கும் .
ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும் . இதனால் ஆடி மாதத் தில் விதைத்த நெல்மணி கள் முளைத்துள்ள நிலை யில் , நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் . ஆனால் 100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு பலர் சென்றுவிடுவதால் , விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை .
இதனால் விவசாயத்தில் இயந் திரபயன்பாடு என்பது மிக அவசியமாகி விட்டது . அதற்கேற்ப நவீன இயந் திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு , வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது . இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது .
இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது . மேலும் அரசு சார்பிலும் மானியம் வழங் கப்படுகிறது . இதனால் இயந்திரங்கள் மூலம் நடவு பணியில் ஈடுபட்டு வருகி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் .






