என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
    X

    ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

    • வருகிற 22-ந்தேதி முதல் நடக்கிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி முதல் புதியதாக திறக்கப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இ- தொகுதி கூட்டரங்கில் நடைபெறும்.

    பொதுமக்கள் ராணிப்பேட்டை, பாரதிநகர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கிற்கு வருகைதந்து கலெக்டரிடம் தங்களது மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறைதீர்வு மனுக்கள் அளிக்கவரும் பொதுமக்கள் எவரும் நவல்பூர், கெல்லீஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×