பைக் மீது மினி லாரி மோதி விவசாயி பலி

இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையம் முற்றுகை சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
பைக் மீது மினி லாரி மோதி விவசாயி பலி
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் அருகே பைக்கும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பைக் ஓட்டி வந்த விவசாயி பலியானார் . அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சோளிங்கர் போலீஸ் நிலையத்ததை முற்றுகையிட்டனர்.

சோளிங்கர் அடுத்த அப்துல்லா புரம் கிராமத்தை சேர்ந்தவர் முனு சாமி (56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஜம்புகுளம் கிராமத்தில் மாட்டுத்தீவனம் வாங்கிக்கொண்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டி ருந்தார் . கேசவனாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த முனுசாமி படுகாயமடைந்து அதே இடத்தில் பலியானார்.

தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் விபத்தில் பலியான முனுசாமி குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு சோளிங்கர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பேச்சு வார்த்தை நடத்தி, சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com