என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில் ரத்ததான முகாம்
    X

    வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரிவு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்தம் வழங்கினர்

    ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில் ரத்ததான முகாம்

    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 115 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது
    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இயங்கி வரும் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.

    வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு ரத்ததான முகாமை நடத்தியது.

    ஐ.என்.எஸ். ராஜாளி கமெண்டிங் அதிகாரி வினோத் குமார் முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் பல்வேறு பிரிவு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்தம் வழங்கினர்.

    115 யூனிட் ரத்தம் பெறப்பட்டு வாலாஜா அரசு மருத்துவர் டாக்டர் சுஜிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×