என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர்.
பா.ஜ.க.வினரை கண்டித்து தி.மு.க.வினர் மறியல்
- ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் திரும்பிய போது பா.ஜ.க.வினர் காரை மறைத்து செருப்பை வீசினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொன்போஸ்கோ தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் காந்தி சிலை அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் செய்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்தனர்.
மேலும் நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியவரை கைது செய்ய வலியுத்தியும், பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர்.
இதில் நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், குமார், கோபிகிருஷ்ணன், நகரஅவைத்தலைவர் தமோதரன், நகர நிர்வாகி வையாபுரி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் யுவராஜா, பாலாஜி, ராம்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனால் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.






