என் மலர்
நீங்கள் தேடியது "Flag Hoisting and Planting Ceremony on First Friday of Adi"
- அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
வாலாஜா:
வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோட்டில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலில் 43ம் ஆண்டு ஆடி வெள்ளி விழாயொட்டி 1001 பெண்கள் பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பஸ், லாரி, உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பயணிகள் ஆட்டோ, லோடு ஆட்டோ உரிமையாளர்கள் நகர கிராம பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இத்திருவிழாவை நடத்துவார்கள். அதன்படி ஆடி முதல் வெள்ளியன்று கொடியேற்றம் மற்றும் பந்தகால் நடும் நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி நடைபெற்றது.
இதனைதொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.ஆடி 4-ம் வெள்ளியான இன்று காப்பு கட்டிய பக்தர்கள் பாலாற்றங்கரையில் இருந்து கரத்துடன் 1001 பால்குடம் ஏந்தி அலகு குத்தி ஊர்வலமாக வன்னிவேடு மோட்டூர், அணைக்கட்டு ரோடு, எம்.பிடி ரோடு, வாலாஜா பேருந்து நிலையம், சோளிங்கர் ரோடு வழியாக கோயில் வந்தடைந்தனர்.
அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை தீபாராதனை நடைபெற்றது.நிகழ்ச்சியில் பக்தர்கள், ஊர் பொதுமக்கள், தொழிலதிபர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனைதொடர்ந்து இன்று மாலை முக்கிய வீதிகளின் வழியாக பம்பை, சிலம்பாட்டம், கரகாட்டம், வாணவேடிக்கையுடன் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பஸ், லாரி, ஆட்டோ, கார் போன்ற வாகனத்தை இழுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
வருகிற 14ம் தேதி அம்மனுக்கு கூழ்வார்த்தலும் பொங்கல் இடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.






