என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்க கருட வாகன வீதி உலா நடந்த காட்சி.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் கஜேந்திர தங்க கருட வாகன வீதி உலா
- பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடிமாத கஜேந்திர தங்க கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கருட சேவை முன்னிட்டு விடியற்காலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை பக்தோசிதப்பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத்தெரு, போஸ்ட் ஆபீஸ் ஆகிய நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






