என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாழ்ந்துகாட்டும் திட்டத்தின் இணை மானிய திட்டம் அறிமுக கூட்டம்
    X

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்ந்துகாட்டும் திட்டத்தின் மூலம் இணை மானிய திட்டம் அறிமுக கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசிய போது எடுத்த படம்.

    வாழ்ந்துகாட்டும் திட்டத்தின் இணை மானிய திட்டம் அறிமுக கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலெக்டர் பங்கேற்பு
    • ஏழை எளிய மக்கள் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயனடைய வாய்ப்புள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மஹாலில் வாழ்ந்துகாட்டும் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இணை மானிய திட்டம் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இணை மானிய திட்டம்

    கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயனடைய வாய்ப்புள்ளது அவர்களையும் தொழில்முனைவோராக்க உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும். குழுத்தொழில் உருவாக்கம் அதன் மூலம் ஏழை மகளிர் முன்னரே வாய்ப்புள்ளது.

    வங்கிகள் தொழில்முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வேண்டும். இணை மானிய திட்ட விளக்கம், விண்ணப்பிக்கும் முறை, திட்டத்தின் செயபாடுகள் குறித்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

    வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் செயல்படும் 227 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து தொழில் முனைவோர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டதினை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆலியமா ஆபரஹாம், மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு நவநீதகிருஷ்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டர்.

    Next Story
    ×