என் மலர்
நீங்கள் தேடியது "he rode his bike and noticed women walking alone."
- காலை 9 மணிக்குள் நோட்டமிட்டு வழிப்பறி
- வட மாநில வாலிபர் கைது
ஆற்காடு:
அசாம் மாநிலம் ஜாகிரோத் பகுதி மவுரிகயூன் கிராமத்தை சேர்ந்தவர் அசின் அலி (வயது 21).இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் செய்யாறு வந்தார்.
ஓட்டல் தொழிலாளி
அங்கு ஒரு ஓட்டலை வாடகைக்கு எடுத்து நடத்தினார். ஓட்டல் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் அதே ஓட்டலில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.
பகல் நேரங்களில் ஓட்டலில் வேலை பார்த்த அசின் அலி காலை 6 மணி முதல் 9 மணி வரை தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிக்க திட்டமிட்டார்.
செயின் பறிப்பு
இதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை பைக்கில் சென்று தனியாக நடந்த செல்லும் பெண்களை நோட்டமிட்டு வந்தார்.
ஆற்காடு அடுத்த மாங்காடு பஸ் நிறுத்தத்திலிருந்து தோல் தொழிற்சாலை வேலைக்கு நடந்து சென்ற மாலதி என்ற பெண்ணிடம் கடந்த மாதம் 3 பவுன் தங்கச் செயின் பறித்தார்.
அதேபோல் சாத்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருந்த ஞான சவுந்தரி என்பவரிடம் 4 பவுன் செயின் பறித்து தப்பி சென்றார்.
இதனை தொடர்ந்து கடப்பந்தாங்கல் கோவில் அருகே நடந்து சென்ற சாவித்திரி என்பவரிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.
இதில் ஒரு செயினை அவரது நண்பர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருந்தார். ஒரு செயினை வீட்டில் பதுக்கினார். மற்றொரு செயினை பைக்கிலேயே வைத்துக் கொண்டு அடகு வைப்பதற்காக சுற்றி திரிந்தார்.
அடுத்தடுத்து நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து ஆற்காடு தாலுகா போலீசில் பெண்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பெண்களிடம் விசாரணை நடத்தியதில் சிவப்பு நிற பைக்கில் வந்து வாலிபர் செயின் பறித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இந்த சம்பவத்தில் ஒரே வாலிபர் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
சிவப்பு நிற பைக் குறித்து ஆற்காடு டவுன் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் டிஎஸ்பி பிரபு மேற்பார்வையில் ஆற்காடு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
ஆற்காடு அடுத்த புதுப்பாடி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனை செய்த போது சிவப்பு நிற பைக்கில் வந்த அசின் அலியை மடக்கிப் பிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் 3 பெண்களிடம் செயின் பறித்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அசின் அலியை கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






