என் மலர்
நீங்கள் தேடியது "The tree slipped"
- மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- மின் கம்பிகளை ஊழியர்கள் அகற்றினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் பழமை வாய்ந்த மரம் ஒன்று இருந்தது.
இது காய்ந்து போன நிலையில் இருந்ததால் திடீரென மின் கம்பி மீதும், போலீஸ் நிலையம் மீதும் திடீரென விழுந்தது. இதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றி மீண்டும் மின் இணைப்பு வழங்கினர்.






