என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்்பாட்டம்

    • வாலாஜா பி.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். சுந்தரேசன், ஜீவா, கவிதா, தீபா, மைதிலி, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய துணை தலைவர் குபேரன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் கலைசெல்வி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டதினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் வனிதா நன்றி கூறினார்.

    Next Story
    ×