என் மலர்
உள்ளூர் செய்திகள்

14 கிராமங்களில் குளங்கள் அமைப்பு
- அம்ரித் சரோவர் மிஷன் திட்டத்தில் ஏற்பாடு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
கடந்த 24.4.22-ந் தேதி தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமரால் அம்ரித் சரோவர் மிஷின் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 குளங்கள் புதிதாக உருவாக்குதல் மேம்பாடு ஆகும்.
14 கிராமங்களில் குளங்கள் அமைப்பு
ஒவ்வொரு குளங்களும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவிலும், சுமார் 10 ஆயிரம் கன மீட்டர் நீர் தேங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்ரித் சரோவர் இலக்கு 56 ஆகும்.
பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்
மேலும் 25 சதவீத இலக்கை வருகிற 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 15 வது நிதி குழு மானியம், கனிம நிதி மற்றும் கிராம பஞ்சாயத்து பொது நிதியின் மூலம் 14 குளங்கள் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் விவரம் வருமாறு:-
அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர், நெமிலி ஒன்றியம் உளியநல்லூர், பின்னாவரம், பள்ளூர், அரிகிலப்பாடி, சோளிங்கர் ஒன்றியம் புலிவலம், பாண்டியநல்லூர், ஆற்காடு ஒன்றியம் ஆயிரம், மேச்சேரி, திமிரி ஒன்றியம் ஆணைமல்லூர், வளையாத்தூர், வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம், தென்கடப்பந்தாங்கல், அனந்தலை ஆகிய ஊராட்சிகளில் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.






