என் மலர்
நீங்கள் தேடியது "கருணாநிதி உருவ படத்திற்கு மறியாதை"
- மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் நடந்தது
- மவுன அஞ்சலி செலுத்தினர்
ஆற்காடு:
வாலாஜாபேட்டையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வன்னிவேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வெளியே வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் கழக தலைவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளருமான சக்திவேல்குமார் தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் 5 நிமிடம் திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை ஏதிரே வாலாஜாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சக்திவேல்குமார் துணைத்தலைவர் பாலாஜி ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் கிளை செயலாளர் நிலவுராஜன் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெய் சுரேஷ் பிச்சைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






