என் மலர்
ராணிப்பேட்டை
- போலீசார் துண்டு பிரசுரம் வழங்கினர்
- போதை பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத் யன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி சோளிங்கர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட் களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
- பாலத்தை கடக்க முயன்ற போது விபரீதம்
- போக்குவரத்து பாதிப்பு
ராணிப்பேட்டை:
சென்னையில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு பெயிண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் அக்ராவரம் ரெயில்வே தரைப் பாலத்தை கடக்க முயன்றது.
அப்போது கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ரெயில்வே துறையால் பாலத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது வேகமாக மோதியது.
இதில் தரையில் புதைத்து வைக்கப்பட் டிருந்த அடிப்பகுதி பெயர்ந்து வெளியே வந்தது. லாரியும் தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது. டிரைவர் லாரியை பின்னால் நகர்த்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 8 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களின் மூலம் தமிழ கத்திற்கு கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும். வகையில் ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரக்கோ ணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமை யில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து வழக் குப்பதிந்து கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- பழுதை சரிசெய்ய கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்திருந்தனர்
- அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்
ஆற்காடு:
ஆற்காடு வேளாண்மை ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார். ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் ஜெயக்குமார், தேர்தல்துணை தாசில்தார் சோனியா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
- ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிக்கினர்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த ஐபேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந் தம், சப்- இன்ஸ்பெக்டர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட் புதரில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமி ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
- செயற்பொறியாளர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், காரை, புளி யந்தாங்கல், அக்ரஹாரம், சீக்கராஜபுரம், வானாப்பாடி, செட்டிதாங்கல், மாந்தாங்கல், தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை ராணிப் பேட்டை செயற் பொறியா ளர் ஆர்.குமரேசன் தெரிவித் துள்ளார்.
- கதவை மூடாமல் இருந்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சி ஆணை யாளர் பரந்தாமன் நேற்று சோளிங்கரில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ப தற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
டிரைவர் இல்லாததால், தூய்மை பணியாளர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். மருதாலம் கூட்ரோடு அருகே காரை நிறுத்தியிருந்தனர். அப்போது டிரைவர் கதவை மூடாமல் விட்டுள்ளார்.
இந்தநிலையில் அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வேன், நகராட்சி ஆணையாளரின் கார் கதவின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரின் கதவு மற்றும் முன்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சிறையில் அடைத்தனர்
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகு திகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் பகுதிகளை சேர்ந்த அம்மனூர் சிவக்குமார் மகன் பன்னீர் செல்வம் (வயது 22), கிரிபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த முனிசாமி மகன் திலிப் என்கிற டி.எம்.ஆர்.திலிப் (26), பிரபாக ரன் மகன் கவுதம் (21), ஏழுமலை மகன் அஜித் என்கிற போர் போஜி (25), அரக்கோணம் சோளிங்கர் ரோடு புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த பாலாஜி மகன் சசிக்குமார் என்கிற கவுதம் (26) ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
மேலும் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய் தார்.
அதன்பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
- 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் செல்வ மந்தை பகுதியில் 17 வயது கல்லூரி மாணவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையா ளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவர் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து மாணவன் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாலுகா இன்ஸ் பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்வமந்தை கட்டன் கூடா பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்கள் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் (22) ஹரிபாபு. என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செயின் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த அனந் தலை கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 48). இவர் வாகனத்தில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), அஜித் (22) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 45 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகைகளை தனித்தனியாக அடகு வைத்தனர்.
இதன் மூலம் நிதி நிறுவனத்தில் இருந்து 14 லட்சம் ரூபாய் பெற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் வருடாந்திர ஆய்வு தணிக்கை செய்தனர்.
இதில் பிரகாஷ், அஜித் ஆகிய இருவரும் அடமானம் வைத்த நகைகள் போலியானது என்பதும், திட்டமிட்டு தங்க முலாம் பூசிய 45 பவுன் நகைகளை ஏமாற்றி அடகு வைத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
- 176 தபால்கள் அனுப்பப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவுக்கு, 5-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தபால் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல் கிராம ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 10-ஆயிரம் வழங்க வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு காலமுறை ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும்.
மேலும் அலுவலகம் நேரம் தாண்டி பணிகள் செய்ய நெருக்கடி நிலைமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும், உள்ளிட 5-அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.
அப்போது 29-ஊராட்சியில் இருந்து 176- தபால்கள் அனுப்பப்பட்டது.






