என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Damage to car door and front"

    • கதவை மூடாமல் இருந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சி ஆணை யாளர் பரந்தாமன் நேற்று சோளிங்கரில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ப தற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

    டிரைவர் இல்லாததால், தூய்மை பணியாளர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். மருதாலம் கூட்ரோடு அருகே காரை நிறுத்தியிருந்தனர். அப்போது டிரைவர் கதவை மூடாமல் விட்டுள்ளார்.

    இந்தநிலையில் அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வேன், நகராட்சி ஆணையாளரின் கார் கதவின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரின் கதவு மற்றும் முன்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×