search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் மோசடி- 2 பேர் கைது
    X

    போலி நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் மோசடி- 2 பேர் கைது

    • நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), அஜித் (22) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 45 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகைகளை தனித்தனியாக அடகு வைத்தனர்.

    இதன் மூலம் நிதி நிறுவனத்தில் இருந்து 14 லட்சம் ரூபாய் பெற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் வருடாந்திர ஆய்வு தணிக்கை செய்தனர்.

    இதில் பிரகாஷ், அஜித் ஆகிய இருவரும் அடமானம் வைத்த நகைகள் போலியானது என்பதும், திட்டமிட்டு தங்க முலாம் பூசிய 45 பவுன் நகைகளை ஏமாற்றி அடகு வைத்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×