search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chain robbery"

    • ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.

    சென்னை:

    மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் கொள்ளையர்கள் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 14-ந் தேதி மாதவரத்தில் கவிதா என்ற பெண்ணிடம் 3 பேர் கொண்ட கும்பல் 8 பவுன் செயினை பறித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது மகேஸ்குமார் என்கிற கொள்ளையன் பிடிபட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதவரம் பகுதியில் பெண்களை குறிவைத்து ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.

    ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு நேற்று இரவு துப்பாக்கி முனையில் தினேஷ் புஜார், ரமேஷ் பஞ்சாரா ஆகிய 2 கொள்ளையர்களையும் மடக்கி பிடித்தனர். இருவரையும் போலீசார் விமானத்தில் அழைத்து வருகிறார்கள். ராஜஸ்தான் கொள்ளையர்கள் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து இங்கு மோட்டார் சைக்கிள்களை முதலில் திருடியிருக்கிறார்கள்.

    பின்னர் திருட்டு மோட்டார் சைக்கிளில் மாதவரம் பகுதியை குறிவைத்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இவர்கள் பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.

    விமானத்தில் வந்து செயினை பறித்து விட்டு ராஜஸ்தான் கொள்ளையர்கள் ரெயிலில் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று விடுவார்கள். விமானத்தில் சென்றால் திருட்டு நகைகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் ரெயில் பயணத்தை தேர்வு செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் செல்வ மந்தை பகுதியில் 17 வயது கல்லூரி மாணவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையா ளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவர் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து மாணவன் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாலுகா இன்ஸ் பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்வமந்தை கட்டன் கூடா பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    அவர்கள் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் (22) ஹரிபாபு. என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செயின் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
    • 7½ பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றனர்.

    கோவை

    கோவை உப்பிலிபாளையம் அருகே உள்ள ஆர்.வி.எல். நகரை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி காமாட்சி (வயது 34). சம்பவத்தன்று இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.


    அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் காமாட்சி கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து காமாட்சி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    • அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை தடாகம் கனுவாய் பாரதி கார்டன் முதல் விதியை சேர்ந்தவர் முத்துகுமார் (35). தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 31).

    சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய முத்துகுமார் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பிரியா தடாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வந்தனர்.

    அப்போது வடவள்ளியை சேர்ந்த நண்பர்கள் டிரைவர் விக்னேஷ் (20), எலக்ட்ரீசியன் நிரஜ்சன் (22), ஆட்டோ டிரைவர் கண்ணன் (23), மற்றும் மாதேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நண்பர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பேச்சியம்மாள் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பீடிசுற்றி கொண்டிருந்தார்.
    • நகைபறித்து சென்ற மர்மநபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமியம்மாள் (வயது75). ராமராஜ் மனைவி சண்முகவடிவு (60).

    கோவில் திருவிழா

    இவர்கள் சிந்தாமணிநகரில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி லெட்சுமியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் சண்முகவடிவு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயக்க மருந்து

    வாசுதேவநல்லூர் சேனையர்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பேச்சியம்மாள் (28). இவர் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பீடிசுற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் அவரது முகத்தில் மயக்கமருந்து தெளித்து அவரிடம் இருந்த 2½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி பேச்சியம்மாளிடம் நகைபறித்து சென்ற மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×