சிங்காநல்லூரில் பெண்ணிடம் 7½ பவுன் செயின் பறிப்பு

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.7½ பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றனர்.
சிங்காநல்லூரில்  பெண்ணிடம் 7½ பவுன் செயின் பறிப்பு
Published on

கோவை

கோவை உப்பிலிபாளையம் அருகே உள்ள ஆர்.வி.எல். நகரை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி காமாட்சி (வயது 34). சம்பவத்தன்று இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் காமாட்சி கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து காமாட்சி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com