என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில் நவம்பர் 14-ந்தேதி தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20-ந்தேதி சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் என்ற தலைப்பில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மேல்நிலை ப்பள்ளியில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் சுமார் 200 மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • விண்ணப்பதாரர்களை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த மாற்றுத்திறனாளிகளின் வயதினை தளர்வு செய்து மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பொருட்டு வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் கலெக்டர் தலைமையில்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக அடங்கிய குழுவினர் விண்ணப்பதாரர்களை நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    எனவே விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் சரக டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்
    • சோதனை‌ சாவடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள தாமரைப்பாக்கம் மற்றும் அவளூர் போலீஸ் நிலையம் உள்ளது.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்பாளையம் சத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய சோதனை சாவடி கட்டிடங்கள் மற்றும் மொத்தமுள்ள 9 சோதனை சாவடிகளிலும் பொருத்தப்ப ட்டுள்ள 18 அதிநவீன கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமை தாங்கினார்.

    கண்காணிப்பு கேமராக்க ளுக்கான கட்டுப்பாட்டு அறையை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திறந்து வைத்து, கேமராக்களின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையி லிருந்து பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்ட ர்கள், சப்-இன்ஸ்பெக்ட ர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வ ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் ஆகியோர் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை நடக்கிறது
    • பிரசாதம் வழங்கப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மட்டுமே பச்சைக் கல்லினால் ஆன 4 அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் சகஸ்ராஜ்ஜுனர் என்னும் கார்த்தவீர்யாஜுனருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சிறப்பு வாய்ந்த கார்த்தவீர்யாஜுனருக்கு நாளை காலை ஜெயந்தி விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்,இழந்த சொத்துகள்,பொருளையும் மீட்கவும் , நீண்ட ஆயுள் வேண்டியும் கார்த்தவீர்யாஜுனர்

    ஹோமமும், பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு நவ கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலியும், தீப சேவையும் நடைபெற்று கார்த்தவீர்யார்ஜுன ரக்ஷையுடன் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

    நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பீடாதிபதி டாக்டர்.முரளிதர சுவாமிகள் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    • கலெக்டரிடம் பெற்றோர் மனு
    • போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவே ரிப்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து, கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் தாய் செல்வி (வயது 52) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், எனது மகன் இளவரசன் (28), லாரி டிரைவர். இவரை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து, கடந்த 15- ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனை ஆற்காடு தாலுகா பெருங்கல் மேடு பாலாற்று பகுதியில் கொலை செய்து புதைத்ததாக லோகேஷ் (28), வாசுதேவன் (27), அருண்குமார் (33), பூவரசன் (24) ஆகிய 4 பேரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைய உள்ளது.

    இந்த கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு கட்டிடத்தில் ராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய தொகுதிகளின்வாக்கு எண்ணிக்கையும், புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் ஆற்காடு, அரக்கோணம், காட்பாடி ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட கட்டிடங்களில் உள்ள அறைகளில் வாக்குகளை எண்ணும் அறைகளும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லூரி வளாகத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகனங்கள் வந்து செல்வதற்கான நுழைவா யில்களையும், அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
    • கோட்ட செயற்பொறியாளர்தகவல் தெரிவித்துள்ளார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி, எச். டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரி குப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகலில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் - மும்பை ரெயில் மார்கத்தில் திருத்தணி -பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத நபர்கள் அலுமினிய ஒயர்களை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைப்பதாக அரக்கோணம்ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அந்தப்பகுதிகளில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியை அடுத்த பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 40) என்பவர் அலுமினிய ஒயரை வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 200-க்கும் மேற்பட்டோருக்கு பால், பழம், பிரட், மதிய உணவு வழங்கப்பட்டது
    • ெரயில்வே பொது மருத்துவமனையில் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கே.நரேஷ் குமார் தலைமையில், அரக்கோணம் நகர காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் அ.எட்வின் ராஜ் முன்னிலையில் உள்புற நோயாளிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு பால், பழம், பிரட், மதிய உணவு வழங்கினர். மற்றும் ெரயில்வே பொது மருத்துவமனையில் அன்னதானம் வழங்கினர்.

    அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் மற்றும் டோமினிக், லட்சுமிபதி, டேவிட், திலீப், துளசி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கௌரிசங்கர் நன்றி கூறினார்.

    • ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்து உள்ள அரசு பொது மருத்துவ மனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர் தலைமையில் மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலையில் நடந்தது.

    அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், அரசு மருத்துவர் சிந்துஜா,ஒன்றிய பொருளாளர் டில்லி பாபு, ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் வில்சன், சுகாதார ஆய்வாளர் செந்தில், கழக நிர்வாகிகள் ஜான், வெங்கடேசன், ஹேம்நாத், செவிலியர்கள் ஹேமாவதி, சபியா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கூட்டுறவு துறையின் மூலம் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, 5 ஆயிரத்து 47 பேருக்கு ரூ. 34கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட 40 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவக்குமார் வரவேற்றார்.

    வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் (பொறுப்பு) முருகேசன் திட்ட விளக்கயுரை யாற்றினார்.

    பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சிவமணி கூட்டுறவு வார விழா உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன்,அனிதா குப்புசாமி, நகரமன்றத் தலைவர் மேல்விஷாரம் முகமது அமீன், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • அய்யப்ப சேவா சமாஜம் மூலம் நடந்தது
    • 250 சேவகர்கள் வீதம் 65 நாட்களுக்கும் சேவையாற்ற உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை , சிப்காட்டில் வேலூர் மண்டல அய்யப்ப சேவா சமாஜத்தின் மூலம் சபரிமலைக்கு உணவுக்கான மளிகை பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இது குறித்து சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு மாநில தலைவர் குருசாமி ஜெயசந்திரன் கூறியதாவது:-

    சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் சன்னிதானத்தில் சேவை பணிக்காக அய்யப்ப சேவா சமாஜத்தின் சேவகர்கள் சேவை பணிக்காக சன்னிதானத்தில் தினமும் குறைந்தது 250 சேவகர்கள் வீதம் 65 நாட்களுக்கும் சேவையாற்ற உள்ளனர்.

    இதன்படி சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் விநியோகம் செய்தல், சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க சேவை பணியாற்றுதல், ஸ்ட்ரெச்சர் சர்வீஸ் போன்ற எண்ணற்ற சேவை பணிகளை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இவ்வாறு சேவைக்காக வருகின்ற 250 க்கு மேற்பட்ட சேவகர்களுக்கும் 3 வேலையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 750 க்கும் மேற்பட்ட சேவகர்களுக்கு 65 நாட்களும் சுமார் 50,000 நபர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பினையும் வட தமிழகம் ஏற்றுள்ளது.இதற்கான உணவு,மளிகை பொருட்களை சென்னை மண்டலம், வேலூர் மண்டலம், சேலம் மண்டலம், கடலூர் மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் சபரிமலைக்கு மளிகை பொருட்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டலம் சார்பில் இன்று (நேற்று)அனுப்பபடுகிறது.

    சன்னிதானத்தில் மூலிகைகுடிநீர் விநியோகம் செய்வதற்காக வேலூர் மாவட்ட தலைவர் நித்தியானந்தம், ரமேஷ் மற்றும் சஞ்சய் ஆகியோரின் கூட்டு முயற்சியால் தண்ணீர் எடுத்து செல்லும் 3 டிராலிகளையும் வேலூர் மாவட்டத்தின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மண்டலம் சார்பில், உணவு, மளிகை பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு மாநில தலைவர் குருசாமி. ஜெயசந்திரன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் நிர்வாகிகள்பலர் உடனிருந்தனர்.

    ×