search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்
    X

    நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்

    • கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைய உள்ளது.

    இந்த கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு கட்டிடத்தில் ராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய தொகுதிகளின்வாக்கு எண்ணிக்கையும், புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் ஆற்காடு, அரக்கோணம், காட்பாடி ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட கட்டிடங்களில் உள்ள அறைகளில் வாக்குகளை எண்ணும் அறைகளும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லூரி வளாகத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகனங்கள் வந்து செல்வதற்கான நுழைவா யில்களையும், அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×