என் மலர்
நீங்கள் தேடியது "Building foundation"
- ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்து உள்ள அரசு பொது மருத்துவ மனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர் தலைமையில் மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலையில் நடந்தது.
அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், அரசு மருத்துவர் சிந்துஜா,ஒன்றிய பொருளாளர் டில்லி பாபு, ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் வில்சன், சுகாதார ஆய்வாளர் செந்தில், கழக நிர்வாகிகள் ஜான், வெங்கடேசன், ஹேம்நாத், செவிலியர்கள் ஹேமாவதி, சபியா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






