search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Week Festival"

    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கூட்டுறவு துறையின் மூலம் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, 5 ஆயிரத்து 47 பேருக்கு ரூ. 34கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட 40 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவக்குமார் வரவேற்றார்.

    வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் (பொறுப்பு) முருகேசன் திட்ட விளக்கயுரை யாற்றினார்.

    பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சிவமணி கூட்டுறவு வார விழா உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன்,அனிதா குப்புசாமி, நகரமன்றத் தலைவர் மேல்விஷாரம் முகமது அமீன், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது
    • கொடியேற்று விழா நடைபெற்றது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருவண்ணா மலையில்உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலக வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவுவங்கியின் இணைப்பதிவாளர் கா.ஜெயம் கூட்டுறவு கொடியை ஏற்றி கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் துணை பதிவாளர்கள் ராஜசேகரன், சித்ரா, செயலாட்சியர்கள் மீனாட்சிசுந்தரம், சுரேஷ்குமார், தீபன் சக்கரவர்த்தி, சார்பதிவாளர் விஜயகுமாரி, டான்பெட்மண்டல மேலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இன்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் மேளா நடைபெற உள்ளது.

    நாளை செங்கம்அடுத்த அந்தனூர் கிராமம் மற்றும் செய்யாறு அடுத்த கடம்பை ஆகிய கிராமங்களில் இலவச கால்நடைசிகிச்சை முகாம்கள் நடைபெறும். 17-ந் தேதி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதலைமையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது.

    18-ந் தேதி திருவண்ணா மலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா கருத்த ரங்கம்ந டைபெறுகிறது. 19-ந் தேதி நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்நடைபெற உள்ளது.

    20-ந் தேதி திருவண்ணா மலை வேளாண் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம்மற்றும் செய்யாறு கிளை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெறும் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்தார்.

    • உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

    சாயல்குடி

    கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடலாடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பாயல் வார விழா நடைபெற்றது. கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

    ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் உலக தாய்ப்பால் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன், பிச்சை, செய்யதுராபியா, வாசுகி, வட்டார மேற்பார்வையாளர் பண்ணையரசி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி, வட்டார திட்ட உதவியாளர் வெள்ளை பாண்டியன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×