என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ேராந்து பணி
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் தலைமையில் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பொன்னையாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் மடக்கிபிடித்தனர்.

    போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 25-ந்தேதி ஆற்காட்டில் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெரும் நோக்கில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ,பட்டபடிப்பு ,நர்சிங், பொறியியல், எம்.பி.ஏ உள்பட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
    • செயற்பொறியாளர் தகவல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை 22-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பாக்கம்,திருப்பாற்கடல், அத்திப்பட்டு, சுமைதாங்கி, ஆலப்பாக்கம், கடப்பேரி, சங்கரமல்லூர், பாகவெலி, முசிறி, ஆகிய கிராம பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • கையுறைகள், முகக்கவசம், மழை கோட் வழங்கப்பட்டது
    • 70 பேர் பணியாற்றி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

    இந்த பேரூராட்சியில் தூய்மை பணிகளில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம், மழை கோட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் வழங்கினார்.

    அப்போது இளநிலை உதவியாளர் மனோகர், சுகாதார மேற்பார்வையாளர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை
    • மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்;

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி ஊராட்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தைக்கு பெரப்பேரி, கோடம்பாக்கம், உளியநல்லூர், மேலேரி, வெளிதாங்கிபுரம், கீழ்களத்தூர், செல்வமந்தை ஆகிய கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் சந்தையானது பாணாவரம் செல்லும் சாலை ஓரத்திலே இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனால் சந்தையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது கீழ்வீதி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு சந்தைக்கு மாற்று இடம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று வியாபாரிகளிடம் கூறினார்.

    • 3 மாதமே ஆன கை குழந்தை உள்ளது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் ரஜினி (வயது28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு சரளா (22) என்கிற மனைவியும், 3 மாதமே ஆன கை குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

    குழந்தையின் தொடர் அழுகை சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் மயங்கிய நிலையில் இருந்த சரளாவை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினார்
    • தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாலாஜா பகுதிகளிலும் நடைபெற்று வந்த திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந் நிலையில் ஆற்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் விளாபாக்கம் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் குரு (வயது 33) என தெரிய வந்தது. தனியாக உள்ள பெண்கள் மற்றும் வயதான பெண்க ளிடம் அச்சுறுத்தி நகை களை பறித்ததாக கூறினார்.

    அவரிடம் இருந்து 4 பவுன் நகை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினார்
    • 3 பைக்குகள் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் வி.சி.மோட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நகர காங்கிரஸ் சார்பில் ,மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே.பாஸ்கர் கலந்து கொண்டு இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர்,வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி. மோட்டூர். கணேசன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன் பாடி எ.எம்.பேட்டையை சேர்ந்தவர் சற்குணம்(வயது 39). அதேபகுதியை சேர்ந்தவர் பாலாஜி(22), விக்னேஷ் (22).கட்டிட தொழிலாளிகள். இவர்கள் 3 பேரும் சென்னையில் நடந்து வரும் கட்டிட பணிக்கு சென்றனர். அங்கு சாரம் கட்டும் பணியை முடித்து விட்டு இரவு ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொ ண்டிருந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கூட்ரோடு அருகே சென்ற போது அங்குள்ள வளைவில் லோடு ஆட்டோவும், இவர்கள் சென்ற பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பைக்கில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன டியாக அங்கிருந்த பொதுமக்கள், சற்குணத்தை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலுல், விக்னேஷை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்துக்குள்ளான பைக், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சற்குணம் நேற்று அதிகாலைசிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இதையடுத்து சற்குணத்தின் உடல் பிரேத பரிசோத னைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைவ்பஜார் பகுதியில் உள்ள, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விநாயகர் சன்னதி, நவகிரகங்கள், துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் லட்சுமணன், மகாத்மா காந்தி முதியோர் காப்பக துணை தலைவர் எஸ் ஆர் பி. பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆற்காடு தொழிலதிபர் ஏவி.சாரதி, வேதபுரி, காளத்தி குமரவேல், திருஞானம் மோகன், மணி, தினகரன், கார்த்திகேயன், நரசிம்மன், தண்டபாணி, மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவின் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு
    • மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் நடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு முகாமில் 38 மனுக்கள் பெறப்பட்டன.

    மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், பிழை திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன.

    முகாம் வட்ட வழங்கல் அலுவலர் சத்யா தலைமை தாங்கி ரேஷன் அட்டையில் ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட 38 மனுக்களை பெற்றுக் கொண்டார். அதில் 36 மனுக்கள் தீர்வு காணப்பட்டு 2 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் தனி வருவாய் ஆய்வாளர் முருகன், வட்ட வழங்கல் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×