என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களிடம் செயின் பறித்த வாலிபர் கைது
    X

    கோப்புப்படம்

    பெண்களிடம் செயின் பறித்த வாலிபர் கைது

    • போலீசார் வாகன தணிக்கையின் போது சிக்கினார்
    • தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வாலாஜா பகுதிகளிலும் நடைபெற்று வந்த திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந் நிலையில் ஆற்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் விளாபாக்கம் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் குரு (வயது 33) என தெரிய வந்தது. தனியாக உள்ள பெண்கள் மற்றும் வயதான பெண்க ளிடம் அச்சுறுத்தி நகை களை பறித்ததாக கூறினார்.

    அவரிடம் இருந்து 4 பவுன் நகை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×