என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை சரியில்லை, என்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என நோயாளி கதறும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில், கொரோனா நோயாளிகளுக்கு ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் வீடியோ ஒன்றினை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில் முககவசம் அணிந்தபடி அந்த நோயாளி கதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவன். கொரோனா தொற்றால் நான் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த ஒரு வாரமாக இங்கு உள்ளேன். எனது தந்தையும் இங்கு தான் சிகிச்சையில் உள்ளார். நெஞ்சுவலிக்காக சிகிச்சைக்கு வந்தபோது அவருக்கு கொரோனா என சொல்லி, எங்களையும் சேர்த்து உட்கார வைத்து விட்டார்கள். எனது அப்பாவுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
அவர் ரொம்ப மோசமான நிலைமைக்கு சென்று கொண்டு இருக்கிறார்.
இங்கு 4 மாத்திரைகள் மற்றும் சாப்பாடு கொடுக்கிறாங்க அவ்வளவு தான். சாப்பாடும் ஒன்னும் சரியில்லாமல் மோசமாக தான் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் எல்லோரிடமும் பேசி விட்டேன். யாரும் எந்தவித சிகிச்சையும் கொடுக்கவில்லை. நாங்க 4-வது தளத்தில் உள்ளோம்.
எனது அப்பா 2-வது தளத்தில் சிகிச்சையில் உள்ளார். எனது அப்பா எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை, அவரது அருகில் சிகிச்சை பெற்று வரும் சக நோயாளிகளிடம் வீடியோ காலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சிகிச்சை சரியாக கொடுக்கப்படுவதில்லை. எல்லா உயர்அதிகாரிகளிடமும் பேசியும் பலனில்லை. கொரோனா வார்டில் நடக்கிறது அநீதி தான்.
எங்களை கூட்டி வந்து சித்ரவதைப்படுத்துவதற்கு பதிலாக எங்க அப்பாவுக்கோ, எங்களுக்கோ விஷ ஊசி போட்டு கொன்றுவிடலாம். இப்படி சித்ரவதை செய்யாதீங்க. ஒழுங்கா சிகிச்சை கொடுத்து எங்களை வீட்டுக்கு அனுப்பி வைங்க. இது தான் நான் அமைச்சர்களிடமும், அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வது.
இவ்வாறு அதில் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தொடர்பாக நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து டீன் மீனாட்சி சுந்தரத்திடம் கேட்டபோது, “அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அவர் கூறுவது முற்றிலும் தவறானது. ராணியார் அரசு மருத்துவமனையில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர், கீரனூர் பகுதியில் இருந்து வந்து சேர்ந்திருக்கிறார். அவரிடம் நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதேபோல மருத்துவ குழுவினரும் அவரிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். அப்போது அவர் குறை எதுவும் சொல்லவில்லை. அவர் எதற்காக இதுபோன்ற கருத்தை வைத்து வீடியோ வெளியிட்டார் என தெரியவில்லை. அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்திருந்தார். நாங்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். அதற்கு அந்த அரசியல் கட்சி பிரமுகரும் நன்றி தெரிவித்து குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அந்த வாலிபருக்கு மட்டுமில்லை, மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

புதுக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்களை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மேலராஜ வீதியில் செல்போன் கடைகள் வரிசையாக உள்ளன. இதில் சாதிக் என்பவரின் செல்போன் கடையை திறக்க ஊழியர்கள் நேற்று காலை வழக்கம் போல் வந்தனர். அப்போது கடை கதவின்(ஷட்டர்) பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மற்றொரு பக்க கதவு வழியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்களில் பல திருட்டு போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் தலை மற்றும் முகத்தை துணியால் மூடியபடி கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், கடையின் உள்ளே இருந்த புதிய செல்போன்களை திருடிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
மேலும் கடையின் உள்ளே சென்றதும் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றிவிட்டு செல்போன்களை திருடியதும், ஒவ்வொரு செல்போனாக பார்த்து, அதில் முன்னணி நிறுவன செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. மர்மநபரின் முகம் ஓரளவு கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. தாடியுடன் காணப்பட்ட அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பழைய குற்றவாளியா? என்று விசாரிக்கின்றனர்.
கடையில் திருட்டு போன செல்போன்கள் அனைத்தும் ‘ஸ்மார்ட் போன்’ எனவும், மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்றும் கடையின் உரிமையாளர் சாதிக் தெரிவித்தார். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் திருட்டு நடந்த செல்போன் கடையின் எதிரே உள்ள ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் அந்த மர்மநபர் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையின் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் அந்த கடையில் இருந்த செல்போன்கள் தப்பின. செல்போன் கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டுபோன சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கை மீறியதாக 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கை மீறியதாக மொத்தம் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர்களையும் கைது செய்தனர். மொத்தம் 617 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் உள்பட அபராதம் விதித்த வகையில் மொத்தம் ரூ.11 ஆயிரத்து 380 வசூலிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்துகள் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கீரமங்கலம்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1985-ம் ஆண்டு கால கட்டத்தில் மொய் விருந்து விழா தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990-ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி பைங்கால் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கி நடந்தது. தற்போது ஆலங்குடி வரை மொய் விருந்து கலாசாரம் பரவியுள்ளது.
கடந்த ஆண்டு வரை 2 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மொய் விருந்து வசூல் கிடைத்துள்ளது. அதேபோல் சமையல் கலைஞர்கள், ஆட்டுக்கறி, அரிசி, விறகு தொடர்பான தொழில் செய்பவர்கள், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு தனி நபரின் அதிக பட்ச மொய் வசூல் ரூ.5 கோடி வரை கடந்த ஆண்டு வசூல் செய்யப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதில், விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் முற்றிலும் அழிந்ததால் கடந்த ஆண்டு மொய் வசூல் கணிசமாக குறைந்தது. அதாவது எதிர்பார்த்ததைவிட பாதி அளவே மொய் வசூலானது. இதில் பலரும் கடன் வாங்கி மொய் செய்தனர். பலர் மொய் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஓரளவு மொய் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடனும், கனவுகளுடனும் விழா நடத்த வேண்டியவர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மொய் விருந்து விழா நடத்த இருந்தவர்களின் கனவு தகர்ந்து போனது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவணி மாதம் முழுவதும் மொய் விருந்து நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மொய் விருந்துகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஒரு மொய் விருந்து கூட நடத்தப்படவில்லை.
இது குறித்து இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த காத்திருப்பவர்கள் கூறுகையில், விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து மொய் விருந்துகளில் மொய் செய்து, 5 ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்தி மொத்தமாக வசூல் செய்வது வழக்கம். அந்த பணத்தை அவர்கள் திருமணம், தொழில், விவசாயம், கல்வி போன்றவற்றுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கஜா புயல் விவசாயத்தை அழித்தது. அதனால் கடந்த ஆண்டு மொய் விருந்து முடங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விவசாய பொருட்கள், வாழைத்தார்கள் போன்றவற்றை விற்பனை செய்ய முடியவில்லை.
இதனால் இந்த ஆண்டு மொய் விருந்துகளை இதுவரை தொடங்க முடியவில்லை. தொடங்கினாலும் விவசாயிகள் மொய் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அதாவது கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த இருந்த சுமார் 5 ஆயிரம் பேர் வருகிற தை மாதம் முதல் படிப்படியாக மொய் விருந்துகள் நடத்த ஆலோசித்து வருகிறார்கள். அந்த நேரத்திலும் மொய் வசூல் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

வடகாடு மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் மது விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் தலைமையில் செயல்படும் சிறப்பு குழு மற்றும் வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்றதாக மாங்காடு பூச்சிகடையை சேர்ந்த குணசேகரன் (வயது 52), புளிச்சங்காடு கைகாட்டி சிவக்குமார்(64), கொத்தமங்கலம் சுரேஷ்(27), ஆவணம் கைகாட்டி சின்னத்துரை(60) ஆகியோரை சிறப்பு குழு போலீசாரும், புள்ளான்விடுதி மற்றும் ஆலங்காடு பகுதிகளில் மது விற்ற வன்னியன்விடுதியை சேர்ந்த சுரேஷ்(37), குரும்பிவயல் வெங்கிடுசாமி(46) ஆகியோரை வடகாடு போலீசாரும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 84 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் முழு ஊரடங்கையொட்டி கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அப்பகுதியில் மது விற்ற கீரமங்கலம் பேரின்பராஜன், குளமங்கலம் தெற்கு சாமிநாதன், நகரம் செல்வராஜ் ஆகியோரை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் நவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த கடைக்கு மதுபாட்டில்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியின்றி, முககவசம் இல்லாமல் வந்து செல்வதால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கடையை தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,720-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 1,617 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 931 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,720-ஆக உயர்ந்துள்ளது.

கீரமங்கலம் அருகே கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக விவசாயி மாற்றியுள்ளார். அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரம்பியது.
கீரமங்கலம்:
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், மழைநீரை சேமிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஏரி, குளம், குட்டைகளில் மழைநீரை சேமிக்க குடிமராமத்து பணிகளும் நடந்து வருகின்றன. வீடுகள், வணிக வளாக கட்டிடங்கள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல அரசு அலுவலகங்களில் பெயரளவிற்கு மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து, மழைநீரை பழைய கிணறுகள் வழியாக பூமிக்குள் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த விவசாயியான வீரமணி, தனது வீட்டின் முன் உள்ள பழைய கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி அமைத்தார். மேலும் மழை காலங்களில் தனது வீட்டின் மேற்கூரை ஓடுகளில் இருந்து வழியும் மழைநீரை குழாய்கள் மூலம் தொட்டியில் சேமித்து, அதனை குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களாக கீரமங்கலம், கொத்தமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
இது குறித்து வீரமணி கூறுகையில், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால் தண்ணீருக்கு சிரமம் ஏற்பட்டது. அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள பழைய கிணற்றை சிமெண்டு பூசி மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி அமைத்தேன். அதற்கு மூடிகள் அமைத்து, மழை பெய்யும்போது சிறிய ஓட்டு வீட்டின் மீதிருந்து வழியும் தண்ணீரை 3 சல்லடைகள் வைத்து வடிகட்டி தொட்டிக்குள் நிரப்பி குடிநீராகவும், செடிகள் வளர்க்கவும் பயன்படுத்தி வருகிறேன். தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையிலேயே அந்த தொட்டி நிரம்பிவிட்டது. இதனால் மீண்டும் மழை பெய்யும்போது தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீரை அருகில் உள்ள பழைய கிணற்றுக்கு நிலத்தடி நீருக்காக வாய்க்கால் மூலம் அனுப்பி விடுகிறேன், என்றார்.
இதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்து, அந்த தண்ணீரை பயன்படுத்தினால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி நிலத்தடி நீரையும் சேமிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்பு காட்டக்கூடாது என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்புணர்வு காட்டக்கூடாது.
அவர்களது குடும்பத்தினர் மற்றும் குணமடைந்து திரும்பியவர்களிடம் பயத்தின் காரணமாக மற்றவர்கள் வெறுப்புணர்வுடன் செயல்படுவதாக புகார்கள் வருகிறது. அவர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார். கூட்டத்தில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரியலூயிஸ் பெக்கிஹோம்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் சண்முகம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வேந்தன்பட்டியை சேர்ந்த அரவிந்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருதரப்பு மோதல் சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் கோட்டாட்சியர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
புதுக்கோட்டை:
அரிமளம் அருகே உள்ள போசம்பட்டியில் சம்பவத்தன்று இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கே.புதுப்பட்டி போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பயனளிக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டார். இதனால் அங்கிருந்த கூட்டம் சிதறி ஓடியது. இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் இருதரப்பையும் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் என்ன? எதற்காக வானத்தை நோக்கி சுடப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இதன்படி நேற்று முன்தினம் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி அந்த கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 3 போலீசாரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அளித்தார்.
அதன்படி நேற்று, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 3 போலீசாரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர். மேலும் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆயுத அறை போலீசார் வினோத் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரையும் விசாரணை செய்ய கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி முடிவு செய்து, அவர்களையும் வரவழைத்தார்.
இதையடுத்து 5 பேரும் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்தும் துப்பாக்கி சூடு நடந்த விதம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இதில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆஜரானபோது, சம்பவ இடத்திற்கு சென்றபோது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் வானத்தை நோக்கி நான் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டேன். ஆனால் துப்பாக்கியால் சுடுவதற்கு எந்தவிதமான முன் அனுமதியோ, உயர் அதிகாரிகளுக்கு தகவலோ நான் தெரிவிக்கவில்லை. வேறுவழியின்றி தற்காப்பிற்காக வானத்தை நோக்கி ஒரு முறை சுட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, என்று விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார்.

ஆதனக்கோட்டை அருகே பெண்ணிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதனக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி தினேஷ். இவரது மனைவி ரேவதி (வயது 27). தினேஷ் தனது குடும்பத்தினருடன் ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மாமியார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ரேவதி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.