என் மலர்
செய்திகள்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை
டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் நவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த கடைக்கு மதுபாட்டில்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியின்றி, முககவசம் இல்லாமல் வந்து செல்வதால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கடையை தற்காலிகமாக மூட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






