search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    புதுக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டு

    புதுக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் செல்போன்களை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மேலராஜ வீதியில் செல்போன் கடைகள் வரிசையாக உள்ளன. இதில் சாதிக் என்பவரின் செல்போன் கடையை திறக்க ஊழியர்கள் நேற்று காலை வழக்கம் போல் வந்தனர். அப்போது கடை கதவின்(ஷட்டர்) பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மற்றொரு பக்க கதவு வழியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்களில் பல திருட்டு போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் தலை மற்றும் முகத்தை துணியால் மூடியபடி கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், கடையின் உள்ளே இருந்த புதிய செல்போன்களை திருடிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    மேலும் கடையின் உள்ளே சென்றதும் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றிவிட்டு செல்போன்களை திருடியதும், ஒவ்வொரு செல்போனாக பார்த்து, அதில் முன்னணி நிறுவன செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. மர்மநபரின் முகம் ஓரளவு கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. தாடியுடன் காணப்பட்ட அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பழைய குற்றவாளியா? என்று விசாரிக்கின்றனர்.

    கடையில் திருட்டு போன செல்போன்கள் அனைத்தும் ‘ஸ்மார்ட் போன்’ எனவும், மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்றும் கடையின் உரிமையாளர் சாதிக் தெரிவித்தார். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் திருட்டு நடந்த செல்போன் கடையின் எதிரே உள்ள ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் அந்த மர்மநபர் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடையின் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் அந்த கடையில் இருந்த செல்போன்கள் தப்பின. செல்போன் கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டுபோன சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×