என் மலர்
புதுக்கோட்டை
சடையம்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரையூர்:
காரையூர் அருகே சடையம்பட்டியில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. ஆனால் இது திறக்கப்படாமல் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் முள்ளிப்பட்டி, ஒலியமங்கலம், உசிலம்பட்டி, சூரப்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வார்கள்.
தற்போது, இப்பகுதிகளில் நெல்அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தனர். ஆனால் சடையம்பட்டி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தாங்கள் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். சடையம்பட்டி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும். பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இந்த ஒரே ஒரு நெல்கொள்முதல் நிலையம்தான் உள்ளது. எனவே கூடுதல் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

கொரோனா 3-வது அலை உருவாக கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து180 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் இருந்து 39 பேர் நேற்று `டிஸ்சார்ஜ்' ஆகினர். மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து494 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 367 ஆக உள்ளது. கொரோனா 3-வது அலை உருவாக கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கறம்பக்குடி அருகே விடுதியில் சிலிண்டர்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
கறம்பக்குடி அருகே மழையூர் அரியாண்டி கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு ரமணி என்பவர் விடுதி காப்பாளராக (வார்டன்) பணியாற்றி வருகிறார். பள்ளிகள் செயல்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்கு ஊழியர்கள் விடுதியை திறந்தனர். அப்போது சமையலறையில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்களை காணவில்லை.
இதுகுறித்து மாணவர் விடுதி வார்டன் ரமணி மழையூர் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மணல்குவாரி அமைக்க கோரி கறம்பக்குடியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கறம்பக்குடி மழையூர் பகுதிகளில் மணல் குவாரி அமைத்துதரக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) நகர தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வீரமுத்து, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஆப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வருவாய்துறையினர் தமிழக அரசு மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு கறம்பக்குடி மழையூர் பகுதிகளில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை யாதவர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 20). நேற்று முன்தினம் இவர் அங்குள்ள ஓட்டல்முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். அப்போது, சோத்துப்பாலையைசேர்ந்த சுரேஷ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்த ரவிச்சந்திரன் விரட்டி சென்று அவரை பிடித்தார். பின்னர் சுரேசை கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.
இதேபோல் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயலை சேர்ந்தவர் சரளா (40). இவர் கடந்த 24-ந் தேதி அறந்தாங்கி தாலுகா அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிளை திருடிய அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவை சேர்ந்த முகமது யாசின் (38) என்பவரை நேற்று அறந்தாங்கி போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 33 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 364 ஆக உள்ளது.
புதுக்கோட்டை அருகே கந்து வட்டிக்கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி அம்மாபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சையது அபுதாகிர். இவரது மனைவி பவுஷியா பேகம் (வயது 38). இந்த தம்பதியர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 18 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிதி நிறுவனத்தை அந்தோணியார்புரத்தை சேர்ந்த லியோ லாரன்ஸ் நடத்தி வருகிறார். கடன்பெற்ற அபுதாகிர் மாதந்தோறும் தவணைமுறையில் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தி வந்தார்.
கொரோனாவின் 2-வது அலை தாக்கத்தால் கடந்த 8 மாதங்களாக அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிதிநிறுவன அதிபர் லியோலாரன்ஸ் சையது அபுதாகிரின் வீடு தேடிச் சென்றார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பவுஷியா பேகத்திற்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பவுஷியா பேகம் மனமுடைந்து திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். கணவர் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் பவுஷியா பேகம் இன்று (சனிக்கிழமை) காலை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சையது அபுதாகிர் மணல்மேல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் அந்தோணியார்புரத்தை சேர்ந்த கந்துவட்டிக்காரர் லியோ லாரன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில், போலீசார் ஆலங்குடி திருவள்ளுவர் சாலையில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, திருவள்ளுவர் சாலை அரசமரம் அருகில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் ஆலங்குடி படேல் நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
கொரோனா வைரஸ் பரவலால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ரெயில்வே துறையில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட தொடங்கின. கொரோனா 2-வது அலை வந்த பிறகும் ரெயில்வே வருமானம் குறைந்தது.
ஊரடங்கின் காரணமாக பயணிகள் அதிக அளவில் வெளியில் செல்லவில்லை. இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையும் குறைந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததாலும், ஊரடங்கின் தளர்வாலும் பயணிகள் அதிக அளவில் ரெயில் போக்குவரத்தை நாடியுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் மட்டும் நடைமுறையில் உள்ளன. ஒரு சில பாசஞ்சர் ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்படுகின்றன. மதுரை கோட்ட ரெயில்வேயில் முக்கியமான ஒரு ரெயில் நிலையமாக புதுக்கோட்டை உள்ளது. தற்போது புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை வழியாக சென்னை, ராமேசுவரம், காரைக்குடி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் வருவாய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வருவாய் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் மொத்த வருவாய் ரூ.74 லட்சத்து 61 ஆயிரம் வரை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்து வந்த வருவாய் கடந்த ஜூன் முதல் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பயணிகள் வருகை, ரெயில்கள் இயக்கம் மூலம் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காணொளிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூகுள் மீட் செயலில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைமாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்ததாவது,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.7.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூகுள் மீட் செயலில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொளிக்காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வண்ணம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொளிக்காட்சி மூலம் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளி விட்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 25 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 363 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை கல்யாணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணன். இவர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் மருந்து கடையில் வேலை செய்து வந்த எனது சகோதரி கவிதா(20), சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை தேடிவருகின்றனர்.