என் மலர்
செய்திகள்

திருட்டு
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை யாதவர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 20). நேற்று முன்தினம் இவர் அங்குள்ள ஓட்டல்முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். அப்போது, சோத்துப்பாலையைசேர்ந்த சுரேஷ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்த ரவிச்சந்திரன் விரட்டி சென்று அவரை பிடித்தார். பின்னர் சுரேசை கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.
இதேபோல் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயலை சேர்ந்தவர் சரளா (40). இவர் கடந்த 24-ந் தேதி அறந்தாங்கி தாலுகா அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிளை திருடிய அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவை சேர்ந்த முகமது யாசின் (38) என்பவரை நேற்று அறந்தாங்கி போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Next Story






