என் மலர்
புதுக்கோட்டை
- பொன்னமராவதியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடை பெற்றது.
- 453 தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை:
பொன்னமவராவதி வட்டார வளமையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் கலந்து கொண்டு, அண்ணா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் ஸ்ரீபிரியங்கா, இந்திரா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு தன்னார்வலர் கையேடு, பட அட்டைகள், கதை ப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், பொ ன்னமவராவதி வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர்( பொறுப்பு)நல்லநாகு, ஆசிரிய பயிற்றுநர்கள் கல்யாணி, முகம்மது ஆஷாத், யசோதா மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,
இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ராசு ஆகியோர் உடன் இருந்தனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 453 தன்னார்வலர்களுக்கும் கையேடுகள் மற்றும் படக்கதைகள், கதைப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே உள்ள மணமேடுபட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் அய்யப்பன் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பரான பொருவாய் கிராமத்தை சேர்ந்த சந்தானம் மகன் மகாமுனியுடன் விராலிமலை அருகிலுள்ள மாதிரிபட்டி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாமுனியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?, அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை
புதுக்கோட்டை:
அறந்தாங்கி அருகே நாகுடி களக்குடியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 45). இவர் கடந்த 12-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வீட்டு வாசல் அருகே சாவியை மறைத்து வைத்துவிட்டு தேடாக்கி கிராமத்திற்கு சமையல் வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், சூட்கேஸ் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அதன் அருகே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- பா.ஜ.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்
- நகர செயலாளர் பெயர் சேர்க்கப்படவில்லை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கள்ளுப்பட்டரை பகுதியைச் சேர்ந்தவர் ஏஆர்எம் ரமேஷ், பாஜகவை சேர்ந்த இவர் தற்போது அறந்தாங்கி நகரச் செயலாளராக புதிதாக பதவியேற்றுள்ளார். அதே போன்று கவிதா ஸ்ரீகாந்த் என்பவரும் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக புதிதாக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் கவிதாஸ்ரீகாந்த் புதிதாக பதவியேற்றதையடுத்து, நகரில் ஆங்காங்கே பதாகைகள் வைத்து தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளார். பதாகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நகரச் செயலாளர் ரமேஷ் பெயர் சேர்க்கப்படவில்லையென கூறப்படுகிறது.
இதனை ரமேஷ் ஏன் தனது பெயரை சேர்க்கப்படவில்லையென கேட்டுள்ளார். அதற்கு கவிதாஸ்ரீகாந்த் அது என் விருப்பம் என பதிலளித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதாஸ்ரீகாந்தின் கனவர் ஸ்ரீகாந்த் அங்கே இருந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்து ரமேஷின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகம் உள்ளிட்ட பகுதியில் காயமடைந்த ரமேஷ் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போன்று கவிதா ஸ்ரீகாந்த்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாஜகவினரிடையே உட்கட்சி மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலால் அறந்தாங்கி நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கோட்டைப்பட்டினத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை, காவல்துறை சார்பாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக முதல்-அமைச்சர் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம்,
கோட்டைப்பட்டினத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஒன்று தொங்கப்பட்டது. அந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை புதுக்கோட்டை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், கடலோரப் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசு இந்த பகுதியில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடங்கியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி மற்றும் பொதுமக்கள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
- கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
- மதங்களை கடந்து மனிதநேயத்தை தொடர்ந்து போற்றி வருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த மங்களநாயகி அம்பாள் உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நாடியம்மன் உள்ளிட்ட பரிவார சன்னதிகளும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராமமக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்கள், செண்டை மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அவர்களை நெடுவாசல் கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.
மதங்களை கடந்து மனித நேயத்தை தங்கள் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போற்றி வருகின்றனர். புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களை பொறுத்தவரையில் இந்து-முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வொரு கிராமத்தினரும் உறவினர்களாக மதங்களை கடந்து மனித நேயத்தோடு அனைவரும் பழகி வருவதாகவும் தெரிவித்தனர்.
- அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
- பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
புதுக்கோட்டை
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்தநிலையில் இரண்டாவது நாளாக நேற்று மாலை அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த தொடர் மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த தொடர் மழையால் அன்னவாசல் அருகே உள்ள பரம்பவயல் பெரிய கண்மாய் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள வாய்க்கால், குளங்கள், வாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே இச்சடியில் உள்ள மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரெங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி, அப்பகுதியில் உள்ள கடைகளை உணது பாதுகாப்பு துறை அலுவலர், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும்
சம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது சம்பட்டிவிடுதி எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த அற்புதசாமி (வயது 52) என்பவர் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதசாமிைய கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் 34-ம் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் ஞான பாக்கியராஜ் (வயது 25). புதுக்கோட்டைைய பூர்வீகமாக கொண்ட தற்போது சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஷாஜகான். இவர் தமிழகம் முழுவதும் பலருக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.
அவரிடம் ஞான பாக்கியராஜ் வேலை பார்த்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே தினமும் ஏராளமான பணத்தை ஞானபாக்கியராஜ் வசூல் செய்து வருவதை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளனர். அவரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக திட்டம் வகுத்தனர்.
இந்த நிலையில் ஞானபாக்கியராஜ் நேற்று வழக்கம் போல் தேவகோட்டையில் பணத்தை கொடுத்து விட்டு, மேலும் பலரிடம் பணம் வசூல் செய்தார். அந்த பணத்துடன் அவர் புதுக்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார். திருமயத்தை அடுத்த கொசப்பட்டி கண்மாய் அருகே வந்தபோது 2 பேர் அவரை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் தங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, நீங்கள் சட்டவிரோதமாக பணம் புழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று கூறி ஞான பாக்கியராஜ் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து ஞான பாக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜிலென்ஸ் அதிகாரிகள் என கூறி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- கீரமங்கலம் பேரூராட்சி ஒப்பந்த அறிவிப்பாணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- பட்டுக்கோட்டை அறந்தாங்கி இணைப்பு சா லை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த அறிவிப்பாணையை வெளியிட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையைச் சேர்ந்த விமல் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த 9.3.2022-ல் ரூ.67 லட்சம் மதிப்புள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி இணைப்பு சா லை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த அறிவிப்பாணையை வெளியிட்டார்.
அதில் 180 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். எனக் கூறப்பட்டிருந்தது.நான் ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்தேன். 29.5.2022-ல் இணைய வழியில் ஏலம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இறுதி முடிவு வெளியிடப்படவில்லை.
எனவே சாலை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த இறுதி முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந் த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து,
கீரமங்கலம் பேரூராட்சி ஒப்பந்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து, ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஜூன் 17-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
- இரண்டு குழந்தையுடன் தாய் மாயமானார்
- தந்தை வீட்டில் இருந்தபோது மாயமாகியுள்ளார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுலத்தைச்சேர்ந்த ராஜசேகர் மனைவி கார்த்தியாயேணி (வயது 30) இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷல்மிதாஸ்ரீ ( வயது 9). மற்றும் நிரஞ்சன் (வயது 4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது.
கும்மங்குளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் இருந்த கார்த்தியாயேணி திடீர் என்று மாயமானார். இது குறித்து இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப் இ ன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் ஆகியோர் வழக்குபதிவு செய்து காணமல் போன தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- கூலி வேலை செய்து வந்ததாக தெரிகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காடு கருக் காக்குறிச்சி ராஜாகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆத்மநாதன் மகள் காளீஸ்வரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 2-ஆம் ஆண்டு பி,காம் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் தர்மராஜ். இவர் திருப்பூரி ல் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.இவர் திருப்பூரில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் காளீஸ்வரி சைக்கிளில் கோபிநாத் நிலம் அருகே வந்தபோது, இவரை தர்மராஜ் இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாராம். இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிர் நிலைத்தில் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து மேல் விசாரனை நடத்தி வருகின்றனர்.






