என் மலர்
புதுக்கோட்டை
- புனித பாத்திமா மாதா தேர்பவனி நடைபெற்றது.
- வான வேடிக்கைகளுடன் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள புனித பாத்திமா மாதா தேவாலய தேர் திரு விழா நேற்று நடைபெற்றது. திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து அன்று முதல் கிராம பொது மக்களால் தினந்தோறும் மண்டகப்படிகார்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அரசடிப்பட்டி அருட்திரு பங்கு தந்தை பபியான் தலைமையில் சிறப்பு நவநாள் பூஜையும் ஆராதனையும் நடைபெற்று வந்தன.
9 ஆம் நாள் இரவு கிராம பொது மக்க ளால் மேளதாளத்துடன் வான வெடிகள் முழங்க தேர்த்திரு விழா நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னாள் பங்குதந்தை சவேரியார், அரசடிப்பட்டி பங்குத்தந்தை பாபியான் கலந்து கொண்டனர்.
- குடும்ப பிரச்சனையில் இளம் பெண் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கணவர், மாமியார் துன்புறுத்தியுள்ளனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊ ராட்சி சேர்ந்த பிரவீன்குமார் மனைவி வினோசியா (வயது 22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பிரவீன்குமார் மற்றும் அவரது தாயார் காந்திமதி ஆகிய இருவரும் சேர்ந்து வினோசியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வினோசியா தனது உடலில் மண்ணெண்ணையை தீவைத்துக்கொண்டார்.
இதை பார்த் த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
- பேனர்களை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கோவில் திருவிழாவிற்கு வைத்திருந்தனர்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மேலப்பட்டி ராசியமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் சித்தி விநாயகர் முருகன் கோவில்கள் உள்ளது. இங்கு புதிய கோவில் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த கட்சியினர், பொதுமக்கள் என ஆலங்குடி- கறம்பக்குடி சாலை எம்.ராசியமங்கலம் நெடுகிலும் பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தெறிந்துவிட்டனர். இதனை அறிந்த பொதுமக்கள் பேனர்களை கிழித்தெறிந்த மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அறிந்த ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆ ய்வாளர் அழகம்மை சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் மற்றும் போ லீசார் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேனரை கிழித்த மர்ம நபர்களை கண்டிப்பாக கைது செய்வோம் என உறுதியளித்ததை தொடர்ந்து கிராமமக்கள் புகார் மனு எழுதி கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- மேற்பனைக்காடு கால்வாயில் மிதந்து வந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு அருகே கல்லணைக் காவல்வாயில் நடப்பாண்டு பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கிளை வாய்க்கால்களில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கால்வாய் மூலம்
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தது. இந்நிலையில் மேற்பனைக்காடு வழியாக கீழ்பாலம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதந்து. இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மிதந்து வந்த உடலை மீட்டர். பிறகு பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இச்சபம்வம் குறித்து பெறப்பட்ட புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து சடலமா தண்ணீரில் மிதந்து வந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து தண்ணீரில் வீசினார்களா ? என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த பயிற்சியை ஈஷா கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறது.
- விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம்.
புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள வடகாடு கிராமத்தில் 'சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே' என்ற கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்றனர்.
மிளகு சாகுபடி மலை பகுதியில் மட்டுமல்லாது சமவெளியிலும் சாத்தியம் என்பதை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவை சேர்ந்த பல விவசாயிகள் நிரூபித்துள்ளனர்.
முக்கியமாக பல வருடங்களாக மிளகு சாகுபடி செய்து வெற்றிகரமாக மிளகு உற்பத்தி செய்து வரும் பால்சாமி, ராஜாகண்ணு, பாக்கியராஜ், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராம சிவக்குமார் மற்றும் கூடுதல் இயக்குனர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீ முகா அனைத்து முன்னோடி விவசாயிகளையும் அதிகாரிகளையும் வரவேற்றார்.
காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாள தமிழ்மாறன் மரம் சார்ந்த விவசாயத்தினால் விவசாயிகளில் பொருளாதாரம் மேம்படுதல், மண் மற்றும் நீர் வளம் மேம்படுதல் குறித்து விளக்கினார்.
சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த பயிற்சியை ஈஷா கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறது. இதுவரை இப்பயிற்சியில் தமிழகம் முழுவதுமுள்ள 5,000 க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்றுள்ளனர். அவ் விவசாயிகள் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடி நடந்து வருகிறது.
விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் வருடா வருடம் வருமானம் பெற இயலும். மிளகு நட்டு 3முதல் 4 ஆண்டுகளில் மிளகு காய்க்கத் துவங்கும். 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகுகொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய இயலும்.
- மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலையம் அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
- இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், அவரவர்க்குரிய பிரச்சனைகளை முகாமிற்கு வருகை தந்து தெரிவித்து பயன் பெறலாம்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலையம் அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், அவரவர்க்குரிய பிரச்சனைகளை முகாமிற்கு வருகை தந்து தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவில் வளாக பகுதியில் மது குடிக்க வருபவர்களை எச்சரித்து போலீசார் பதாகை வைத்துள்ளனர்
- கோவில் அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மேல கரும்பிரான்கோட்டையில் பழமை வாய்ந்த வீர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவு பகுதி மற்றும் அந்த சாலை நெடுகிலும் ஆலங்குடி காவல் துறையினர் எச்சரிக்கை பதாகைகள் வைத்துள்ளனர்.
அதில் இக்கோவிலின் புனிதம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக கோவில் வளாகம் உள்ளே மது அருந்த அனுமதி கிடையாது என்றும், மீறி னால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவிலின் வளாகத்தை சுற்றி உள்ள புதர் காடுகளில் இளைஞர்கள் மறைந்து இருந்து மது அருந்தியதோடு, மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி சென்றுள்ளனர்.
கோவில் அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவிலை சுற்றி விவசய பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில் மது பிரியர்களை கட்டுப்படுத்த ஆலங்குடி காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 370 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
- ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு முத்துக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அங்கன்விடுதியில் சாராய ஊரல்கள் இருப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்துசென்ற மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணமதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் முகா மிட்டனர்.
அப்போது கந்தர்வகோட்டை தாலுகா மோகனூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 37), நீண்டகாலமாக இத்தொழிலை செய்து வருவதும், விற்பனை செய்ததும் தெரிந்தது.
அதன் பேரில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் 120 லிட்டர் மற்றும் ஊரல் 250 லிட்டர் என மொத்தம் 370 லிட்டர் சாராயத்தை காட்டுப் பகுதியில் வைத்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அதனை அதே பகுதியில் கொட்டி அழித்தனர். பின்னர் முத்துக்குமாரை கைது செய்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சாராயம் எரிப்பதற்கு உண்டான காலி குடங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுளையும் பறிமுதல் செய்தனர்.
இதுெதாடர்பாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு முத்துக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மகாபலிபுரத்தில் அடுத்த மாதம் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
- டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ேமாடி இன்று ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைக்கிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை சுற்றுச்சூழல் மற்றும் இளை ஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ேமாடி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைக்கிறார்.
அந்த ஜோதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரும் நகரங்களுக்கு செனறு அதன் பின் வருகின்ற ஜூலை 28-ந்தேதி தமிழகம் கொண்டு வரப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதுவரை இல்லத வகையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்பதாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள், மற்றும் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளும் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற ஜூைல 15-ந்தேதிக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் (திட்டம்) மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
- பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம், மண்புழு உரம் தயார் செய்தல் மற்றும் இதர பணிகள் மேற்கொள்வதையும் ஆய்வு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் (திட்டம்) மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இலுப்பூர் பேரூராட்சி நவம்பட்டி பூங்காவில் மியோவாக்கி காடுகள் முறையில் மரங்கள் நடப்பட்டுள்ளதையும், மூலதன மான்ய நிதித் திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சங்கரன் ஊரணி மேம்பாடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடு, வீடாக குப்பைகள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பணியாளர்களால் தரம் பிரித்து வாங்கப்படுவதையும், பேரூராட்சியின் சமுதாய கூடம் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையும் ஆய்வு செய்தார்.
பேருந்து நிலைய பொதுக் கழிப்பறை 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கோமுட்டி ஊரணி மேம்பாடு செய்யும் பணிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும் மற்றும் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம், மண்புழு உரம் தயார் செய்தல் மற்றும் இதர பணிகள் மேற்கொள்வதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் காளியப்பன், உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், செயல் அலுவலர் ஆஷாராணி, உதவிப் பொறியாளர் உதயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வைரவன், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
- உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
புதுக்கோட்டை:
விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரொக்கம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 247-ம், 52 கிராம் தங்கமும், 1 கிலோ 628 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் மலேசியா 50 ரியால்- 2, 10 ரியால்- 1, 1 ரியால்- 6, சிங்கப்பூர் 10 டாலர் 3 மற்றும் ஆஸ்திரேலியா 50 டாலர் 2-ம் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அரசு பள்ளி மாணவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
- வீடு புகுந்து தாக்கியவர்களை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். கூலிதொழிலாளியான இவர் 19 வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியவர்களை எதிர்தரப்பினர் வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில், சாதிப்பெயரை சொல்லி கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட சுப்பிரமணியன், பிரபாகரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடகாடு போலீஸ் நிலையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்ட குழுவினர் போலீஸ் நிலையம் அருகே மதிய உணவிற்காக சமையல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்களுக்கு உரிய முறையில் நியாயம் கிடைக்காத பட்சத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.






