வனப்பகுதியில் பதுக்கிய 370 லிட்டர் சாராயம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 370 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு முத்துக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
வனப்பகுதியில் பதுக்கிய 370 லிட்டர் சாராயம் பறிமுதல்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அங்கன்விடுதியில் சாராய ஊரல்கள் இருப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்துசென்ற மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணமதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் முகா மிட்டனர்.

அப்போது கந்தர்வகோட்டை தாலுகா மோகனூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 37), நீண்டகாலமாக இத்தொழிலை செய்து வருவதும், விற்பனை செய்ததும் தெரிந்தது.

அதன் பேரில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் 120 லிட்டர் மற்றும் ஊரல் 250 லிட்டர் என மொத்தம் 370 லிட்டர் சாராயத்தை காட்டுப் பகுதியில் வைத்து பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அதனை அதே பகுதியில் கொட்டி அழித்தனர். பின்னர் முத்துக்குமாரை கைது செய்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சாராயம் எரிப்பதற்கு உண்டான காலி குடங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுளையும் பறிமுதல் செய்தனர்.

இதுெதாடர்பாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு முத்துக்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com